எதற்கும்_தீர்வு_உண்டு
எதற்கும்_தீர்வு_உண்டு
வாழ்வில் எந்தப் பிரச்சினைகள் வந்தாலும் துவண்டு போகக் கூடாது.முடிந்த வரை நாம் தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும்.தன்னம்பிக்கை ஊட்டும் வரிகளை எமது மனதுக்குக் கூறிக் கொள்ள வேண்டும்.
உங்களுக்கு கவலைகள் வந்தால் உங்கள் வாழ்வில் நடந்த மகிழ்ச்சியான தருணங்களை
அசைபோடுங்கள்.அது உங்கள் கவலைகளுக்கு நிவாரணம் வழங்கி உங்களை அடுத்த கட்டத்துக்கு அழைத்துச் செல்லும்.
எவ்வளவு பெரிய கவலைகளாக இருந்தாலும் ஒரு நொடி சந்தோசம் அனைத்து கவலைகளையும் கானல் ஆக்க வல்லது.ஆகவே முடிந்த வரை உங்களுக்கு பிடித்த விடயங்களை நீங்கள் கவலையாக இருக்கும் சந்தர்ப்பங்களில் செய்ய முற்படுங்கள்.
நீங்கள் சில கவலைகளில் இருக்கும் போது உங்களுக்கு என்ன செய்வதென்று தெரியாமல் தடுமாறி நிற்பீர்கள். அந்த நேரம் ஒரு ஆறுதல்,ஒரு ஊக்குவிப்பு,ஒரு அன்பு,ஒரு வழிகாட்டல் ,ஒரு உதவியை யாராவது தேவையில்
இருக்கும் ஒருவருக்கு செய்து பாருங்கள்.
அந்த நேரம் அவர்களை விட நீங்கள் கவலையில் இல்லை என்று உங்களுக்குப் புரியும்.
அவர்களது பிரார்த்தனையும் ஊக்குவிப்பும் பாராட்டும் உங்கள் கவலையையும் அழித்து விடும்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
Comments