கேமராமேதை கர்ணன் நினைவு நாளின்று










கேமராமேதை கர்ணன் நினைவு நாளின்று😢
திரையுலகில் படத்தை மட்டும் பார்த்துவிட்டு வரும் ரசிகர்கள் உள்ளனர். பாட்டுகளை ரசிக்கும் ரசிகர்கள், தங்கள் அபிமான நடிகரின் சண்டைக் காட்சி, பஞ்ச் டயலாக்குகளை ரசிக்கும் ரசிகர்களும் உள்ளனர். சில ரசிகர்கள், சினிமாவில் கால்பதிக்க துடிப்பவர்கள் படத்தின் டெக்னிக்கல் சமாச்சாரங்களையும் ரசிப்பார்கள், விமர்சிப்பார்கள்.அப்படி விமர்சிப்பவர்கள் அதிகம் பேசுவது காட்சி அமைப்பு, கேமரா கோணம், டைரக்‌ஷன் போன்றவைகளாகத்தான் இருக்கும். இயக்குநர், கதாசிரியர், கவிஞர், இசையமைப்பாளர் என்ன உருவாக்கினாலும் அதை ரசிகன் கண்முன்னே கொண்டு வந்து நிறுத்துவது கேமராமேன்களே. அதனால்தான் தமிழ் திரையுலகில் கேமராமேன்களையும் ரசிகர்கள் கவனித்து போற்றியுள்ளனர்.
அப்படி அந்த காலத்தில் போற்றப்பட்ட தமிழ் திரை உலகம் இப்போது மறந்து போன காமிரா மாமேதைதான், மிகச்சிறந்த சாகச ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான ஒளிப்பதிவு ஜாம்பவான் கர்ணன்
மேற்கத்திய ஒளிப்பதிவு பாணியை தத்ரூபமாக தமிழ் திரையுலகத்துக்கு அறிமுகப்படுத்திய பெருமை இவரை மட்டுமே சாரும்.
கர்ணன் இயக்கிய ஜம்பு திரைப்படத்தில் நீருக்கு அடியில் இருக்கும் பொருட்களை தெள்ளத்தெளிவாக நம் கண் முன்னே கொண்டு வந்து காட்டியவிதம் பிரமிக்க வைக்கும்.
திரைப்படங்களில் காட்டும் குதிரை ஓட்டம், குதிரை சண்டை காட்சிகளை தத்ரூபமாக கையாளும் விதம் இவருக்கு மட்டுமே உரித்தான சிறப்பு. பல சாகச காட்சிகளை திறம்பட படம் எடுக்கும் திறனாளர்.
தங்க இரத்தினம் படத்தில் இரண்டு பக்கமும் கைக்கு எட்டாத அளவுக்கு அலைகள் வந்து மோதிக்கொள்ளும் காட்சி, பிரமிக்க வைக்கும்.
இவர் எம்.ஜி.ஆர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன், சிவாஜி கணேசன் நடித்த கப்பலோட்டிய தமிழன், வீரபாண்டிய கட்டபொம்மன்,
ரஜினிகாந்த் நடித்த பொல்லாதவன், இந்த படத்தில் இவரது ஒளிப்பதிவை கண்டு வியந்து ரஜினிகாந்த், ஒளிப்பதிவாளர் கர்ணனுக்கு வைர மோதிரம் பரிசாக அளித்தார்.
கமல் நடித்த சிம்லா ஸ்பெஷல், சிவப்பு சூரியன் உள்ளிட்ட 150 படங்களுக்கு மேலாக ஒளிப்பதிவாளராகவும், 25 திரைப்படங்களில் இயக்குனராகவும் இருந்து முத்திரைப் பதித்துள்ளார்.
ஒளிப்பதிவாளர் கர்ணன் தமிழக அரசின் 2003-ம் ஆண்டுக்கான ‘ராஜா சாண்டோ வர்த்தக விருது’ பெற்றவர்.
புகழ்பெற்ற நடிகைகளான கே.ஆர்.விஜயா, மாதவி ஆகிய இருவரையும் திரையுலகத்திற்கு அறிமுகப்படுத்தி வைத்தார்.
கர்ணன் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த படங்களில் சில :
காலம் வெல்லும் (1970)
ஜக்கம்மா (1972)
கங்கா (1972)
ஒரே தந்தை (1976)
எதற்கும் துணிந்தவர்கள் (1977)
புதிய தோரணங்கள் (1980)
ஜம்பு (1980)
இப்பேர்பட்ட ஒளிப்பதிவாளர் கர்ணன் மாரடைப்பு காரணமாக தனது 79 வது வயதில் சென்னை சூளைமேட்டில் இதே 13 டிசம்பர் 2012 ம் ஆண்டு மறைந்தார்.

from the Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,