கரப்பான் பூச்சி, பூரான், கொசு தொல்லையே இருக்காது.

 இந்த பவுடரை 1 ஸ்பூன் பாத்ரூமில், சிங்கில் போட்டால், 1 மாதத்திற்கு கரப்பான் பூச்சி, பூரான், கொசு தொல்லையே இருக்காது.




நம்முடைய குளியலறை கழிவறை சிங்கு இவைகளை சுத்தம் செய்ய காசு கொடுத்து எத்தனையோ லிக்வீட்டுகளை வாங்குகின்றோம். ஆனால் அதன் மூலம் பெரியதாக நமக்கு எந்த பிரயோஜனமும் இருப்பது கிடையாது. அதாவது, அந்த பொருட்களை குறை சொல்லவில்லை. இருப்பினும் இந்த லிக்விட்களை போட்டு கழுவினாலும் பாத்ரூமில் கரப்பான் பூச்சி தொல்லை, கொசு தொல்லை, பூரான் தொல்லை, குட்டி குட்டி பூச்சிகளின் தொல்லை இருக்கத்தான் செய்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு கட்ட பழைய ஐடியாவை தான் இன்று நினைவு கூறப்போகின்றோம்.


அந்த காலத்தில் நம்முடைய பாட்டிகள் அம்மாக்கள் எல்லாம் இதை வைத்துதான் கழிவறையை, குளியலறையை சுத்தம் செய்வார்கள். இன்று நாம் இதை மறந்து விட்டோம். ப்ளீச்சிங் பவுடர் தாங்க அது. ப்ளீச்சிங் பவுடரை வாங்கி பாத்ரூம் சுத்தம் செய்தால் அந்த வாசத்திற்கு கொசு தொல்லையே இருக்காது. குறிப்பாக இந்த மழைக்காலத்தில் பாத்ரூமில் இருந்து அதிகமாக நமக்கு கொசு பூச்சிகளின் தொல்லை இருக்கும்.


அதை தவிர்க்க வேண்டும் என்றால் வாரத்தில் ஒரு நாள் ப்ளீச்சிங் பவுடரை வைத்து பாத்ரூமை சுத்தம் செய்ய வேண்டும். ப்ளீச்சிங் பவுடரை வைத்து பாத்ரூம் தரையை சுத்தம் செய்து வர, பாத்ரூம் தரைக்கொழகொழப்பாகவும் இருக்காது. மழைக்காலத்தில் பாத்ரூம் தரை நீண்ட நேரம் காயாமல், கசகசாவென இருக்கும் தொல்லையும் இருக்காது. சீக்கிரம் தரை காய்ந்து விடும். ஏனென்றால் தரையில் இருக்கும் அழுக்கை சுத்தமாக இந்த ப்ளீச்சிங் பவுடர் நீக்கிவிடும்.


பாத்ரூமில் இருக்கும் தண்ணீரை சுத்தமாக தள்ளி விடுங்கள். ஈரம் இருக்கக்கூடிய தரையில் இந்த ப்ளீச்சிங் பவுடரை தூவி பிரஷ் கொண்டு, நன்றாக தேய்த்து விட்டு பத்து நிமிடம் கழித்து, சாதாரணமாக துடைப்பதால் தேய்த்து, தண்ணீர் ஊற்றி கழுவி விட்டாலே போதும். பாத்ரூம் பளிச் பளிச் என மாறும். இரவு தூங்க செல்லும் போது ஒரு ஸ்பூன் ப்ளீச்சிங் பவுடரை எடுத்து தண்ணீர் போகக்கூடிய அந்த சாக்கடையில் ஒரு ஸ்பூன், தூவி விடுங்கள் அவ்வளவுதான். எந்த பூச்சியும் அந்த ஓட்டையின் வழியாக இரவு நேரத்தில் பாத்ரூமுக்குள் நுழையாது.


அடுத்து சிங்க். கல்லில் போடப்பட்ட சிங்கை இந்த ப்ளீச்சிங் பவுடரை போட்டு சுத்தம் செய்ய வேண்டும். இரவு தூங்க செல்லும் போது ஒரு ஸ்பூன் அந்த சிக்கு ஓட்டையில் ப்ளீச்சிங் பவுடரை கொட்டி விட்டால் போதும். எந்த பூச்சும் சமையல் அறைக்குள் நுழையவே முடியாது. முயற்சி செய்து பாருங்கள். குறிப்பு சூப்பரா ஒர்கவுட் ஆகும். செலவும் மிக மிக கம்மிதான். (ஸ்டீல் சிங்கை இந்த ப்ளீச்சிங் பவுடரை போட்டு சுத்தம் செய்ய முடியாது. ஆனால் அந்த ஓட்டையில் மட்டும் கொஞ்சமாக ப்ளீசிங் பவுடரை கொட்டி விடலாம்.)


உங்களுக்கு பிளீச்சிங் பவுடர் அலர்ஜி என்றால், காலில் ஒரு செருப்பு போட்டுக் கொண்டு பாத்ரூமில் கழுவலாம். மூக்குக்கு ஒரு மாஸ்க் போட்டுக் கொள்ளுங்கள். ஹாப்பிக் போன்ற கெமிக்கல் கலந்த கிளீனரை வாங்கி பயன்படுத்துவதை விட, இப்படி ப்ளீச்சிங் பவுடரை பயன்படுத்துவது நம்முடைய சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை அதிகமாக கொடுக்காது. குறிப்பு பிடித்திருந்தால் உங்கள் வீட்டில் கட்டாயம் ட்ரை பண்ணி பாருங்க



Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி