சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்
சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம் - இன்று!
1971 -ல் பொதுத்தேர்தல் முடிவுகள் வந்துகொண்டிருந்தது. காமராஜுடன் சேர்ந்து ராஜாஜி அமைத்த கூட்டணி உடைந்து விழுந்து நொறுங்கிக் கொண்டிருக்கிறது.
அச்சமயம் செய்திகளைக் கேட்க ஒரு சிறு ரேடியோ தேவைப்பட்டது. பேட்டரியால் இயங்கும் 'டிரான்சிஸ்டர்' ஒன்றை பக்கத்துவீட்டில் இருந்து வாங்கிக் கொண்டுவந்து ராஜாஜி அருகில் வைத்தார்கள்.
அறுபது ஆண்டுகள் பொதுவாழ்வில் இருந்த பிறகு- கவர்னர் ஜெனரல் பதவியில் இருந்த பிறகு - கவர்னராகவும், மத்திய அமைச்சராகவும் இருந்த பிறகு, இரண்டு முறை முதல்வராக இருந்து ஓய்வு பெற்ற பிறகு- 'சக்கரவர்த்தி' என்ற பட்டப்பெயர் கொண்ட அந்த மனிதரிடம், சொந்தமாக ஒரு 'டிரான்சிஸ்டர்' கூட இல்லை. அதுவும் ஒரு ஆடம்பரம் என்று கருதியவர்தான் ராஜாஜி!
Comments