"நாதஸ்வரம்"

       "நாதஸ்வரம்



 மார்கழித் திங்களான இப்போது விடியற்காலையில் பஜனைகள்  புறப்பட்டு பல்வேறு கீர்த்தனைகள் பாடி மக்களை இசையால் ஈர்ப்பவர்கள் உண்டு.


 பல்வேறு சபாக்களில் இசை விழாவை ஏற்படுத்தி இசையால் மக்களை ஈர்ப்பவர்கள் இந்த மார்கழித் திங்களில் தான்.


 நம் கலைப் பண்பாட்டை உயர்த்தும் கருவியாக பல்வேறு இசைக் கருவிகள் இருந்தாலும்,  நாதஸ்வரம் என்னும் இசைக்கருவி  தனித் தன்மையை வாய்ந்தது என்று சொன்னால் அது மிகையாகாது.


 தில்லானா மோகனாம்பாள் படத்தில் சிக்கல் சண்முகசுந்தரத்தின் ( நடிகர் திலகத்தின்) வாசிப்புக்கு மயங்காத தமிழர்கள் இல்லை. நாதஸ்வர கச்சேரியில் மிருதங்கமும் சேர்ந்த வாசிப்பு  நம் செவியோரம் இதமாய் தேன் வந்து பாயும் என்பதில் சந்தேகம் இல்லை.


 இந்த நிலையில் "நாதஸ்வரம்" குறித்து அடியேன் பாடல் எழுதியுள்ளேன்.


 இசையை ரசிப்பது போல் இந்தப் பாடலினை இசை திங்களில் பதிவிடுவதில் பெருமைப்படுகிறேன்.

       "நாதஸ்வரம்"



 மங்கல ஓசையாய் மனதைக் கவரும்


 மரியாதைக் கருவியாய் மதிப்பவர் எவரும்


 கை விரல்கள் ஏழும் துளையில் இருக்கும் 


 கானத்தின் தன்மையால் ஏற்றம் இறக்கம்


 உதடுகளின் நடுவே சீவடியில் அழுத்தம்


 உள்ளிருக்கும் காற்றால் ஊதுவதே பொருத்தம்


 நாபிக் கமலத்தின் அசைவால் இசையும்


 நம்மையும் ஈர்த்து தலையும் அசையும்



 நாதஸ்வர ஓசையும் தேனாய் ஒலிக்கும்


 நாதமோ ஏழுஸ்வரங்கள் வழி பிறக்கும்


 பாட்டின் வளமை மெய்தனை மறக்கும்


 பலருக்கு சுகமோ உள்ளூற கிடைக்கும்



 முன்னோர்கள் சிலரால் வழிவந்த திறமை


 தன்முயற்சியால் தொடர்வது என்றைக்கும் பெருமை


 வாசிப்பவரை பாராட்டினார் உற்சாகம் மலரும்


 வாத்தியக் கருவியால் கலைப் பண்பாடும் தொடரும் 


  முருக.சண்முகம்



video link






 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,