*இயற்கை அழகு*

 *இயற்கை அழகு*





பெண்கள் அனைவருமே ஒளிரும் சருமத்தைப் பெற வேண்டும் என்று தான்  விரும்புவர்.  அதிலும் இளம்பெண்கள் அதிகம் நினைப்பர். அதற்கு பல வழிமுறைகள் உள்ளன. அதில் ஒன்று ஆரஞ்சுத் தோல். ஆம், ஆரஞ்சுத் தோலைப் பயன்படுத்தி  சருமத்தை எப்படி அழகாக ஒளிரச் செய்வது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

@ohotvnammachennai


இளமைப் பருவத்தில் உள்ளவர்களுக்கு எப்போதும் சருமம் பளபளப்பாக ஒளிர வேண்டும் என்று தான் விரும்புவர். அதற்கென பிரத்யேக உணவுகளைக் கூட தங்களின் உணவு முறையில் சேர்த்துக் கொள்வர். அதாவது சருமத்துக்கு நன்மை தரக்கூடிய உணவுகளை சாப்பிடுவர். இப்படி சாப்பிடுவது மட்டுமின்றி சில பொருட்களை சருமத்தின் மேற்பகுதியில் கூட பயன்படுத்தி சரும அழகை மெருகேற்றுவார்கள்.


 அதில் ஒன்று ஆரஞ்சுத் தோலை சருமத்தில் பயன்படுத்துவது.


 ஆம், வைட்டமின் 'சி' நிறைந்த ஆரஞ்சுப் பழத்தை விட அதன் தோலில் தான் அதிக அளவு வைட்டமின் 'சி' உள்ளது. பிரகாசமான மற்றும் பளபளப்பான சருமத்துக்கு உதவும் ஆன்டி ஆக்ஸிண்கள் ஆரஞ்சுத் தோலில் உள்ளன. இதை முகப்பொதியாக (பேஸ்பேக்காக) பயன்படுத்துவதால் தெளிவான மற்றும் பிரகாசமான சருமத்தைப் பெற முடியும்.


ஆரஞ்சுத் தோலில் பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது முகப்பரு மற்றும் எண்ணெய் சருமத்தைப் போக்க உதவும். ஆரஞ்சுத் தோலை முகப்பொதிகளுடன் (பேஸ்பேக்குகளுடன்) சேர்த்து பயன்படுத்தும் போது உங்களின் சருமம் புத்துணர்ச்சி பெறும். ஆரஞ்சுத் தோலில் உள்ள துவர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அனைத்து சருமத்துக்கும் சிகிச்சையளிக்க உதவும். முதலில் ஆரஞ்சுத் தோலை சூரிய ஒளியில் உலர்த்தி தூளாக்கிக் கொள்ளுங்கள். அந்தத் தூளை காற்று புகாத குப்பியில்  சேமித்து ஆறு மாதம் வரை பயன்படுத்தலாம்.

 சரி வாங்க, இந்த ஆரஞ்சு தோலைக் கொண்டு எப்படி பேஸ் பேக்குகளை உருவாக்குவது என்று பார்ப்போம்.



ஆரஞ்சுத் தோல் - தயிர் முகப்பொதி (பேஸ்பேக்)


ஒரு தேக்கரண்டி ஆரஞ்சுத் தோலின் தூள் மற்றும் இரண்டு தேக்கரண்டி தயிர் எடுத்துக் கொள்ளுங்கள். அதனை நன்றாகக் கலக்கி உங்களின் முகத்தில் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவி விடுங்கள். இந்த முகப்பொதியை (பேஸ்பேக்கை) நீங்கள் உங்களது முகத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் தெளிவான மற்றும் புத்துணர்ச்சியான சருமத்தைப் பெறலாம். இந்த முகப்பொதி (பேஸ்பேக்) உங்களுக்கு உடனடி புத்துணர்ச்சியைத் தரும்.


ஆரஞ்சுத் தோல், மஞ்சள் மற்றும் தேன் முகம் கழுவுதல் (பேஸ்வாஷ்)


ஒரு தேக்கரண்டி ஆரஞ்சுத் தோல் தூளுடன் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் ஒரு தேக்கரண்டி இயற்கையான தேனை எடுத்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் ஒன்றாகக் கலக்கி நன்றாக பசை (பேஸ்ட்)போல் ஆக்கிக் கொள்ளுங்கள். இந்தப்  பசையை (பேஸ்ட்டை) முகம் மற்றும் கழுத்தில் தடவி, 5 முதல் 10 நிமிடங்களுக்குப் பிறகு பன்னீர் (ரோஸ் வாட்டர்) கொண்டு முகத்தைக் கழுவுங்கள். முகப்பரு உள்ளவர்கள் இந்த முகம் கழுவுதலைப் (பேஸ் வாஷைப்) பயன்படுத்த வேண்டாம்.


ஆரஞ்சுத் தோல், முல்தானி மட்டி மற்றும் பன்னீர் முகப்பொதி (ரோஸ் வாட்டர் பேஸ்பேக்)

எண்ணெய் சருமம் உள்ளவர்கள் இந்த முகப்பொதியைப் (பேஸ் பேக்கை) பயன்படுத்தலாம். இது அவர்களுக்கு நன்மை செய்யும். ஒரு தேக்கரண்டி ஆரஞ்சுத் தோலின் தூள், ஒரு தேக்கரண்டி முல்தானி மட்டியை எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன், ஒரு தேக்கரண்டி பன்னீர்  சேர்த்து பசை  செய்து கொள்ளுங்கள். இந்தப் பசையை முகம் மற்றும் கழுத்தில் தடவிக் கொள்ளுங்கள். பின்னர் அந்தக் கலவை உலர்ந்தவுடன் அதனைக் கழுவி விடவும். இந்த முகப்பொதி  உங்களின் சருமத்தை சுத்தப்படுத்தி, முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் ஒயிட்கெட்ஸை வெளியேற்ற உதவும்.



டாக்டர்.  செ. பியூலா செல்வமணி,

(மருத்துவ பயிற்சியாளர்),





அரசு யோகா இயற்கை மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை,

அரும்பாக்கம்,

சென்னை 106

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,