இயக்குனர் சிகரம் அவர்களின் நினைவு நாள் இன்று

 இயக்குனர் சிகரம் அவர்களின் நினைவு நாள் இன்று  ( டிசம்பர் 23)



 தமிழ் திரை உலகத்தில், தனக்கென தனியி டம் பிடித்து அதில் வெற்றி கண்டவர் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர்


 தஞ்சாவூர் நன்னினத்தில் பிறந்து, பிஎஸ்சி வேதியலில் பட்டம் படித்து, சென்னை மாநில கணக்காயர்  அலுவலகத்தில் (A. G. Office )பணி புரிந்தவர் இவர்.


 அலுவலகத்தில் பணிபுரியும் போதே, மேடை நாடகங்கள் பல எழுதி இயக்கியும், திரைப்படத் துறையில்   முதல் முதலில் எம்ஜிஆர் நடித்த  தெய்வத்தாய் படத்திற்கு கதை வசனம் எழுதியவர்.


 சிவாஜி நடித்த எதிரொலி படத்திற்கு இவர் தான் கதை வசனம்.


 இவரது நாடக நண்பரான, நாகேஷ் வைத்து முதன் முதலில் நீர்க்குமிழி படம் இயக்கினார்.


 அதன் பிறகு இரு கோடுகள், காவியத்தலைவி, எதிர்நீச்சல், நூற்றுக்கு நூறு, அபூர்வ ராகங்கள், மூன்று முடிச்சு புன்னகை மன்னன் தில்லு முல்லு, சிந்து பைரவி  இப்படி 100 படங்களுக்கு மேல்  இயக்கிய பெருமை இவருக்கு உண்டு.


 இன்றைக்கு தமிழ் திரையுலகில் மின்னும் நட்சத்திரங்களான பத்மஸ்ரீ கமலஹாசனையும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தையும்  திரைப்படத்திற்கு கொண்டு வந்தவர் இவரே.



 தனது கடின உழைப்பால் இயக்குனர் சிகரம் கே. பாலச்சந்தர் தமிழ் திரைப்படத் துறையில்  அன்றும் இன்றும் என்றும்  போற்றப்படும் தனித்தன்மை கொண்ட மாமனிதர்.


 சின்னத்திரைையிலும் பல்வேறு நாடகங்களை தனது நிறுவனமான மின் பிம்பங்கள் மூலம் தமிழர்களின் மனதைக் கவர்ந்தவர்.



  அவரது நினைவு நாளான இன்று, இயக்குனர் சிகரம். கே பாலச்சந்தர் அவர்களை நாம் நினைவில் கொள்வோம்.


 முருக. சண்முகம்



Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,