உலகிலேயே முதன் முதலாக அனைத்து இடங்களிலும் தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் எது தெரியுமா?
உலகிலேயே முதன் முதலாக அனைத்து இடங்களிலும் தங்கம் ஜொலிக்கும் ஹோட்டல் எது தெரியுமா?
அந்த ஹோட்டலில் எங்கு திரும்பினாலும் தங்கம் ஜொலிக்கிறது. அதன் சுவர்கள், கைப்பிடிகள், கதவுகள் அவ்வளவு ஏன் நீச்சல் குளம், பாத்டப், வாஷ்பேஷின் கூட தங்கத்தால் செய்யப்பட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.. அது இந்த ஹோட்டல் எங்கிருக்கிறது தெரியுமா... வியட்நாம் தலைநகர் ஹனோய் நகரில்தான். 5 நட்சத்திர ஹோட்டலான இதில் அனைத்து இடங்களிலும் 24 காரட் தங்கம் ஜொலிக்கிறது. இதன் மொத்த கட்டுமான செலவு மட்டும் ரூ.1512 கோடி என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்...உண்மையிலேயே சொர்க்கத்துக்கு வந்து விட்டோமோ என்று எண்ணுகிற அளவுக்கு ஜொலிக்கிறது. தங்கம் பதிக்கப்பட்ட உலகின் முதல் ஹோட்டல் என்ற பெருமையையும் இந்த ஹோட்டல் பெற்றுள்ளது. உலகமே கொரோனா கட்டுப்பாட்டால் ஹோட்டல் தொழில் வீழ்ச்சி அடைந்து விட்டது என்று கதறிக் கொண்டிருந்த 2020 ஆண்டில் ஜூலை மாதம் தான் இந்த ஹோட்டல் தொடங்கப்பட்டது என்பது ஆச்சரியம் தானே..
Comments