மண்சட்டி

 


மண் சட்டி வாங்கி பயன்படுத்தினால் அது சீக்கிரமே உடைந்து போகுதா? புதியதாக வாங்கிய மண் சட்டியில் முதலில் இதை தடவி விடுங்கள். எத்தனை வருடம் ஆனாலும் நீங்கள் வாங்கிய மண்சட்டி உடைந்தே போகாது.

என்னதான் நாகரிகம் வளர்ச்சி அடைந்து விட்டாலும் நான் ஸ்டிக் பேனில் சமைத்தாலும், மண்சட்டினுடைய மகத்துவத்தை நாம் இன்னும் மறக்கவில்லை. மண்சட்டியில் சமைத்தால் இருக்கக்கூடிய மனமும் ருசியும், ஆரோக்கியமும், மற்ற பாத்திரங்களை வாங்கி சமைப்பதில் நமக்கு கிடைக்காது. இது நம்மில் பல பேருக்கு தெரியும். அதனால் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நம்முடைய வீடுகளில் மண் சட்டியை பயன்படுத்த தொடங்கி விட்டோம். ஆனால் சில பேருக்கு புதுசாக மண்சட்டி வாங்கி, அதை எப்படி பழகுவது என்று தெரியவில்லை. புது மண் சட்டியை வாங்கி பழகத் தெரியாதவர்களுக்கு எளிமையான வீட்டு குறிப்பு 



முதலில் மண் சட்டி, மண் கடாய் எது வாங்கினாலும் சரி, அதை முதலில் ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் போட்டு ஊற வைக்க வேண்டும். எத்தனை மண்பாண்டங்கள் வாங்கி இருக்கிறீர்களோ, அது மூழ்கும் அளவிற்கு ஒரு அகலமான அன்னக்கூடையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு, அதில் வாங்கிய புது மண் சட்டியை எல்லாம் போட்டு 24 மணி நேரம் ஊறவைத்து விடுங்கள். அல்லது ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வையுங்கள். தண்ணீரில் ஊறிய மண் பாண்டங்களை எடுத்து தண்ணீரை வடிகட்டி விட்டு வெயிலில் நன்றாக இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் காய வைத்து விட வேண்டும்.



அதன் பிறகு அந்த மண்பாண்டங்களில் சமையல் எண்ணெய் தடவ வேண்டும். உங்களுடைய வீட்டில் நீங்கள் எந்த எண்ணெயை சமையலுக்கு பயன்படுத்துவீங்களோ, அந்த எண்ணெயை எடுத்து மண் சட்டியின் உள்பக்கம், மண்சட்டியின் வெளிப்பக்கம் எல்லா இடங்களிலும் தடவி விடுங்கள். கொஞ்சம் தாராளமாகவே எண்ணெய் தடவலாம். எண்ணெய் தடவிய ஒரு சில மணிநேரங்களில் அந்த மண்சட்டி எண்ணெயை நன்றாக உறிஞ்சிக் கொள்ளும்.

அதன் பிறகு உங்களுடைய வீட்டில் அரிசி வடித்த கஞ்சி அல்லது அரிசி களைந்த தண்ணி, இந்த இரண்டு தண்ணீரையுமே ஒன்றாக எடுத்து இந்த மண் பாத்திரங்களில் ஊற்றி அப்படியே ஒரு நாள் இரவு முழுவதும் ஊற வைத்து விட வேண்டும். அதன் பின்பு அந்த தண்ணீரையெல்லாம் கீழே கொட்டி விட்டு சாதாரணமாக மண் சட்டியை சோப்பு போட்டு கழுவி, அடுப்பில் வைத்து சமைக்க பயன்படுத்துவது தான் வேலை.

அடுப்பில் வைத்து சமைக்க பயன்படுத்தும் எந்த மண்பாண்டமாக இருந்தாலும், மேல் சொன்ன குறிப்பை பின்பற்றினாலே போதும். அந்த மண்சட்டி உடையாமல் நீண்ட நாட்களுக்கு வரும். அதேசமயம் இப்படி பழகிய மண் பாண்டங்களில் சமைக்கும்போது அதிலிருந்து மண் வராது.

வெறுமனே தண்ணீர் குடிக்க பயன்படுத்தும் பானைகளை வாங்கினால் அதை தண்ணீரில் ஊற வைத்து, ஒரு நாள் அரிசி கலைந்த தண்ணீரை ஊற்றி ஊறவைத்து அதன் பின்பு நன்றாக கழுவி தண்ணீர் ஊற்றி வைத்துக் கொண்டால் போதும். அந்த மண்பாண்டம் நீண்ட நாட்களுக்கு நமக்கு உடையாமல் இருக்கும்.





Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி