காமாட்சி விளக்கு - குத்து விளக்கு... வித்தியாசம்*

 காமாட்சி விளக்கு - குத்து விளக்கு... வித்தியாசம்*





மங்கலப் பொருட்களில் காமாட்சி விளக்கும் ஒன்று. குத்து விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. விளக்குகளில் இது புனிதமானது. எல்லா வீடுகளிலும் இருக்க வேண்டிய விளக்கு. பூஜைக்கு முன் பூவும், பொட்டும் வைத்து மங்கலத்துடன் தீபம் ஏற்றி, தினமும் வழிபடத்தக்கது. பல குடும்பங்களில் பரம்பரை பரம்பரையாக காமாட்சியம்மன் விளக்குகளை பொன் போலப் போற்றிப் பாதுகாப்பதை வழக்கத்தில் வைத்துள்ளனர். சிலர் தம் முன்னோர்கள் ஏற்றிய காமாட்சியம்மன் விளக்குச் சுடர் தொடர்ந்து, நிலைத்து, எரியும்படி கவனித்துக் கொள்கின்றனர். புதுமனை புகும்போதும், மணமக்கள் மணப் பந்தலை வலம் வரும் போதும், எல்லா இருள்களையும் நீக்கியபடி, அருள் ஒளியை அனை வருக்கும் அருளியபடி முன்னால், பக்தியுடன் ஏந்திச் செல்லப் படும் விளக்கும் காமாட்சியம்மன் திருவிளக்கே. புதுப்பெண் புகுந்த வீட்டுக்கு வரும்போது, 'நிறைநாழி' எனப்படும் படியில் நெல் வைத்து அதன் மீது காமாட்சி அம்மன் விளக்கின் மீது தீபம் ஏற்றப்படும்.



பெண்ணுக்கு சீர்வரிசைகளை தரும்போது காமாட்சியம்மன் விளக்கும், இரண்டு குத்து விளக்குகளும் அவசியம் வழங்கப்பட வேண்டும். விளக்குகள் தமிழர் வாழ்வில் ஓர் அங்கம். மங்கலப் பொருட்களில் இந்த காமாட்சி விளக்கும் ஒன்று. 


குத்து விளக்கு


 குத்துவிளக்கும், காமாட்சியம்மன் விளக்கை போலப் புனிதமானது. செங்குத்தாக நிமிர்ந்து நேராக நிற்கும் விளக்கு (குத்து-நேர்) என்பதால் குத்துவிளக்கு என்ற பெயர் ஏற்பட்டது. இந்த விளக்கு பூஜையில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஐந்துமுகக் குத்துவிளக்குகள் இரண்டு பூஜை அறையில் சுடர் விட்டு பிரகாசிக்குமானால் அங்கே மங்கலம் பொங்கும் என்பது ஐதீகம். ஓர் அங்குலம் முதல், பல அடிகள் உயரமுள்ள குத்து விளக்குகள், மிக அழகிய கலை நுட்பங்க ளுடன் கிடைக்கின்றன. உச்சியில் அன்னம் வீற்றிருக்கும் குத்து விளக்குகளில் சில வழிபாட்டுக்குரியவையாகவும், சில அலங்காரத்திற்கு உரியவையாகவும் விளங்குகின்றன.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி