*பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மணி ஆபரணங்கள்*

 *பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் மணி ஆபரணங்கள்*


தங்கத்துக்கும், வெள்ளிக்கும் இருக்கும் முக்கியத்துவம் மணி ஆபரணங்களுக்குக் கிடைப்பதில்லை. பயன் படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் நகையாக மணி ஆபரணங்கள் இருக்கின்றன.

5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான மணிகளால் ஆபரணம் தயாரிக்கும் கலையை பெண்களுக்குக் கற்பித்து, வருவாயும் ஈட்டித் தருகிறார் பெங்களூருவைச் சேர்ந்த பெண் பொறியாளர் சுருதிஜா மொகந்தி. இந்தியாவில் ஐரோப்பியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மணிகள், பெரும்பாலும் வீட்டு அலங்காரத்துக்கும், ஆபரணங்களுக்கும் பயன்படுத்தப்பட்டன.குறைந்த விலையில் மணிகள் கிடைத்து வருவதால் பழமையான மணிகளால் செய்யப்படும் நகைகள் இப்போது வீழ்ச்சியின் விளிம்பில் உள்ளன. இந்நிலையில், 45 வயதான ஸ்ருதிசா மொஹந்தி, 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான இந்த கலையைக் கையில் எடுத்திருக்கிறார். இதற்காக பொறியியல் படிப்பு சார்ந்த பணியை ராஜினாமா செய்து விட்டு இந்த ஆபரண தயாரிப்பில் கால் பதித்து வருகிறார்.


இது குறித்து அவர் கூறுகையில், "கடந்த 2019-ம் ஆண்டு பழமையான மணியாலான ஆபரணம் தயாரிப்பு குறித்த பல தேடல்களை மேற்கொண்டேன். இந்த மணி ஆபரணத் தொழிலைபெண்களுக்கு கற்பித்து, அவர்கள் சொந்தக்காலில் நிற்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன்.


தங்கத்துக்கும், வெள்ளிக்கும் இருக்கும் முக்கியத்துவம் மணி ஆபரணங்களுக்குக் கிடைப்பதில்லை. பயன்படுத்திவிட்டு தூக்கி எறியப்படும் நகையாக மணி ஆபரணங்கள் இருக்கின்றன. மணி ஆபரணங்கள் குறித்து மக்களுக்கு விளக்குவது எனக்குக் கடினமாக இருக்கிறது. மணிகளால் நகைகள் செய்வது கடினம். இதற்கு நேரமும் அதிகமாகும். மேலும் திறமையும் தேவை.


பெண்களுக்கு மட்டுமே நான் வேலை வழங்குகிறேன். பொதுவாக எந்தவொரு நிறுவனமும் 8 மணி நேரம் பணி செய்ய வேண்டும் என்பார்கள். ஆனால், இந்தப் பெண்கள் எப்போது தங்களுக்கு நேரம் இருக்கிறதோ அப்போது வந்து பணியாற்றினால் போதும் என்று கூறியிருக்கிறேன்.


மணிகளால் ஆபரணம் தயாரிக்கும் பணியில் பள்ளி ஆசிரியைகள், வேலையில்லா பெண்கள், கல்வி செலவுக்காக பணியாற்றும் மாணவிகள் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். ஒரு மாதத்தில் 24 மணிகளால் ஆன ஆபரணத்தைச் செய்தால் ரூ.8 ஆயிரம் சம்பளம் வழங்குகிறேன்'' என்றார். 

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,