#குறட்டை_ஏன்_ஏற்படுகிறது

 #குறட்டை_ஏன்_ஏற்படுகிறது?




குறட்டை ஏன் ஏற்படுகிறது?


நாம் சுவாசிக்கும் காற்றானது மூக்கு, வாய், தொண்டை, மூச்சுக் குழல் வழியாக நுரையீரலுக்குச் செல்கிறது. இந்தப் பாதையில் எங்காவது தடை ஏற்படும்போது குறட்டை வருகிறது. விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?


தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.


அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.


என்ன காரணம்?🤔


சளியுடன் கூடிய மூக்கடைப்பு, ஒவ்வாமை, சைனஸ், அடினாய்டு/டான்சில் வளர்ச்சி, மூக்கு இடைச்சுவர் வளைவு, கழுத்தைச் சுற்றிக் கொழுப்பு அதிகமாக இருப்பது போன்ற காரணிகள் குறட்டை ஏற்பட வழிவகுப்பது உண்டு. 


குறட்டையைத் தடுக்க என்ன செய்யலாம்?🤔


# தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.


# மல்லாக்கப் படுக்க வேண்டாம்.


# ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.


# உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.


# புகை பிடிப்பது, மது குடிப்பது, அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை சாப்பிடுவது போன்றவற்றாலும் குறட்டை ஏற்படுவதுண்டு. எனவே இவற்றை நிறுத்த வேண்டும்.


# காலையில் சுவாசப் பயிற்சி செய்ய வேண்டும்.


# நல்லெண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறட்டையையும் குறைக்கும்.


# கால் ஸ்பூன் மஞ்சள் பொடி எடுக்கவும். இதில் ஏலக்காய் 2 தட்டிபோடவும் இரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைத்து ஒரு டம்ளர் ஆக வடிகட்டி தேன் சேர்க்கவும். இரவு தூங்கும் முன்பு தினமும் 50 மில்லி அளவுக்கு குடித்துவர குறட்டை ஒலி குறைந்து விடும். 


# அரை ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சிறிது திப்பிலி பொடி, தேன் சேர்க்கவும். இதை 1/2 , 1/4 ஸ்பூன் அளவுக்கு எடுத்து இரவு தூங்கப்போகும் முன்பு சாப்பிட்டு வர குறட்டை குறையும்.


# பசும் நெய்யை நன்றாக உருக்கி இளம் சூடாக நல்லெண்ணெய்யுடன் கலந்து இரவு நேரத்தில் மூக்கில் ஓரிரு சொட்டு விட்டு உறிஞ்சுவதால் குறட்டை ஒலி குறையும். காலை வேளையிலும் இதேபோல் செய்து வந்தால் நாளடைவில் குறட்டை குறையும். 


# எளிதாக கிடைக்க கூடிய அருகம்புலுடன், மஞ்சள் கசாயம் பகலில் வைத்து குடிக்கலாம். 


# குறட்டையை குறைக்க தேன்&நெய் ஒரு சிறந்த உணவாகும். இதனால் மூச்சு குழாய், தொண்டையில் உள்ள சளியை சீர்செய்து வலுவான தசைகள் அமைகிறது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,