தென் துருவத்தில் மனிதன் முதன் முதலில் கால் வைச்ச வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு

 நம்ம பூமி பந்தின் எல்லையான தென் துருவத்தில் மனிதன் முதன் முதலில் கால் வைச்ச வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்த தினமின்று





🌍
அதாவது மனிதர்கள் வாழமுடியாத அளவு உறைபனிசூழ் கண்டமான அண்டார்டிகாவில்தான் பூமியின் தென்துருவம் அமைந்துள்ளது. அண்டார்டிகா யாருக்கும் சொந்தமானது அல்ல. இங்கே எந்த அரசாங்கமும் கிடையாது என்பதால் இதனை நோ மேன்ஸ் லாண்ட் (No Man’s Land) என்று அழைக்கின்றனர். இங்கு சூரிய வெப்பம் மிகக் குறைந்த அளவே வந்து சேர்கிறது. இதனால் கண்டம் முழுவதும் பனிக்கட்டியால் மூடப்பட்டு உள்ளது. இங்கு ஆண்டிற்கு 200 மி.மீ. அளவு மட்டுமே மழைபெய்கிறது. இது ஒரு பனிக்கட்டி பாலைவனம் என்றும் சொல்வார்கள். 98 சதவீதம் பனிப்பாறைகளால் மூடப்பட்டுள்ளது. சுமார் 5000 மீட்டர் (16000 அடி) அளவிற்குத் தரையில் ஆழ்துளையிட்டால்தான் மண்ணைப் பார்க்க முடியும். எப்போதும் தாங்க முடியாத குளிர் மிகுந்த சீதோஷ்ண நிலையிலேயே இருக்கும்.
இந்த அண்டார்டிக்காவின் வெப்பநிலையானது மிகக்குறைந்தபட்சம் மைனஸ் 80 பாகை செல்சியஸ் முதல் மைனஸ் 90 பாகை செல்சியஸ்வரை இருக்கும். அதிகபட்சம் 5 முதல் 15 பாகை செல்சியஸ்வரை இருக்கும். அண்டார்டிகா உலகின் 7ஆவது கண்டம் எனவும் அழைக்கப்படுகிறது. அண்டார்டிகாவில் பனிப்புயல் 300 கி.மீ. வேகத்தில் வீசும்.
பனிக்காற்று மணிக்கு 1300 கி.மீ. வேகத்தில் வீசும். இப்படி உலக அதிசமாகத் திகழும் அண்டார்டிகாவில், எந்தவித உயிரினங்களும் நிலையாக வாழ்வதில்லை. கண்ணுக்கு எட்டிய தூரம்வரை ஒரே பனிப்படலமாகக் காட்சியளிக்கும்.அண்டார்டிகாவில் நிரந்தர குடிமக்கள் கிடையாது. வெவ்வேறு உலக நாடுகளின் ஆராய்ச்சிக் கூடங்களில் சுமார் 1000 பேர் தங்கி ஆய்வு செய்து வருகின்றனர். இங்கு 20 விமான தளங்கள், 37 ஹெலிகாப்டர் தளங்கள் உள்ளன. துறைமுகம் கிடையாது. ஸ்காட்- அமுண்ட்சென் மையத்தைத் தலைநகரமாகக் கருதுகின்றனர். கடல் நீல வண்ணம் கொண்ட ஒரு செவ்வகத்தின் மையத்தின் அண்டார்டிகா கண்டத்தின் வடிவம் வெள்ளை நிறத்தில் இருப்பதே இக்கண்டத்தின் கொடியாகும். பாசிகள், கிரில், சீல், மோகேஸ், பென்குயின், ப்ளாங்டன் போன்ற சில உயிரினங்கள் பனிப் பிரதேச சூழலுக்கு ஏற்ப வாழ்கின்றன.
இப்படியான புவியியல் தென் துருவமான அந்த அதிசய உலகை முதன் முதலாக நார்வே நாட்டைச் சேர்ந்த அமுன்ட்சென் என்பவர் தலைமையிலான நான்கு பேர் கொண்ட குழு 1911ஆம் ஆண்டு டிசம்பர் 14-ல் அடைந்தது. இந்த ஆபத்தான பயணத்தை மேற்கொண்டதன் மூலம் பூமியின் எல்லையை தொட்டவர் என்ற பெருமையை அமுன்ட்சென் பெற்றார்.
அங்கு மூன்று நாட்கள் தங்கிருந்து ஆய்வுகளை மேற்கொண்டு பின் டிசம்பர் 17ஆம் தேதி அவர் நாடு திரும்பினர். அவருடைய இந்த வீர பயணத்தை போற்றுவோமா?

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி