ஆரஞ்சு பழத்தோலை மட்டுமே வைத்து பானை வயிற்றையும் எப்படி கரைக்கலாம்னு பாருங்க...

 ஆரஞ்சு பழத்தோலை மட்டுமே வைத்து பானை வயிற்றையும் எப்படி கரைக்கலாம்னு பாருங்க...



எடையைக் குறைக்க வேண்டுமா?

 இதோ ஒரு மாபெரும் மந்திர யுக்தி இருக்கிறது. 

பழங்கள் தேவலோக தேவாமிர்தத்தின் பூலோகச் சிதறல்கள். கனிகளைக் காலம் முழுவதும் உண்பது, தேவலோக அமிர்தத்தை அருந்துவதற்கு ஒப்பானதாகும். 

எந்தச் சுவையான கனியானாலும் அதைக் காக்க கடுமையான அல்லது மென்மையான தோல்கள் அக்கனியைக் சுற்றி இருக்கும். இத்தகைய தோல்கள் பழங்களின் மென்மையான உட்புறத்தைக் காத்து நிற்கும்.


கனிகளில் அதிக சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. அதே நேரத்தில் சில கனிகளில் படர்ந்திருக்கும் தோல்களில் கனியை விட அதிக அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்திருக்கும்.


ஆரஞ்சுப் பழங்கள்

உலகின் பல பகுதிகளில் பலவிதமான கனிகள் கிடைக்கின்றன. ஆனால், சில பழங்கள் பரவலாக பல இடங்களில் கிடைக்கும். சில கனிகள் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டுமே கிடைக்கின்றன.


அவ்வாறு உலகில் பல நாடுகளில், பல பகுதிகளில் பரவலாக கிடைக்கும் பழங்களில் ஒன்று ஆரஞ்சு பழம். இதில் பலவகைகள் இருக்கின்றன. ஆஸ்திரேலிய ஆரஞ்சுகள், ஒருவகை சீனத்து ஆரஞ்சுகள் வேறுவகை. இந்திய ஆரஞ்சுகளோ பல வகை. ஒவ்வொரு வகைகளுக்கும் சுவையில் வேறுபாடு இருக்கும். ஆனாலும் உலகம் முழுவதும் அனைவராலும் விரும்பப்படும் பழமாக விளங்குகிறது.


இத்தகைய அற்புத பழத்தில் வைட்டமின்-சி சத்து நிரம்பியுள்ளது. அதைத் தவிர இயற்கை ஆக  சர்க்கரையும் நிரம்பியுள்ளது. ஆரஞ்சின் தோலில் பழத்தில் உள்ளதை விட அதிகளவில் பல சத்துக்கள் இருக்கின்றன.


ஆரஞ்சின் தோலை மட்டுமே கொண்டே உடலின் எடையை எப்படி குறைக்க இயலும் என்பதை காண்போம்.


எடை குறைய

ஆரஞ்சு தோல்களில் அபரிமிதமான நார்ச்சத்துக்கள் இருக்கின்றன. இந்த நார்ச்சத்துக்கள் உடல் எடையை குறைப்பதற்கான மிக சரியான வரப்பிரசாதமாக விளங்குகிறது. இதனை உட்கொண்டால் வயிற்றில் வெகு நேரம் இருந்து பசிக்காமல் செய்கிறது. இதனால் உடல் எடை குறைவது உறுதி.



ஆரஞ்சு தோல்களில் உள்ள வேதிப்பொருள் நமது உடலில் ஒவ்வாமை உண்டாக்கக்கூடிய ஹிஸ்டமைன் என்ற வேதிப்பொருளின்  சுரப்பை கட்டுப்படுத்தி ஒவ்வாமையைத் தடுக்கிறது.



ஆரஞ்சு தோல்களில் அபரிமிதமான வைட்டமின் C யும் மற்ற சில வேதிப்பொருள்களும், நமது உடலில் உள்ள கொழுப்பை எரித்து கரைக்க பெருமளவில் உதவுகின்றன.

 இன்னும் பெயரிடப் படாத, பகுத்தறிந்து கண்டுபிடிக்கப் படாத சில வேதிப்பொருள்களா உடல் உறுப்புகளில் உள்ள அதீத கொழுப்பை குறைத்து உடல் எடையை சரி செய்ய உதவுவதாக  ஆராய்ச்சியில் நிரூபணமாகி இருக்கிறது.



இரத்தத்தில் சர்க்கரை அளவை, மிகவும் சீராக வைத்திருக்க ஆரஞ்சுப் பழம் துணை புரிகிறது 


 ஆரஞ்சு தோல்களில் சில வேதிப் பொருள்களும், ஒரு வகை என்ஜைமான "பெக்டின்" இரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை வேகமாக உயர்த்தாமலும், வேகமாக குறையாமலும் சமன் செய்து காக்கின்றது. இவ்வாறு சர்க்கரை அளவை சமமாக வைத்திருப்பதால், மயக்கம் வராமலும், வேறு உபாதைகள் அண்டாமலும் நமது உடலை காத்துக் கொள்கிறது. மேலே கண்ட மந்திர பலன்களை நாம் பெற, ஆரஞ்சு தோல்களில் இருக்கும் சத்துக்களை நாம் உட்கொள்ள வேண்டும். ஆரஞ்சு தோல்களின் சத்துக்களை இரண்டு வகைகளில் நாம் பெறலாம்.


ஆரஞ்சு தோல் தேநீர்

செய்முறை:-


இந்த முறையானது ஆரஞ்சுத் தோலை காய வைத்து பயன்படுத்தும் முறையாகும்.


மூன்று ஆரஞ்சு பழங்களை எடுத்துக்கொள்ளவும்.


பழங்கள் ஒவ்வொன்றையும் இரண்டிரண்டு பாதிகளாக வெட்டிக்கொள்ளவும்.

ஜுசரின் உதவி கொண்டு பழங்களை நன்றாகப் பிழிந்து சாறை எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும். சாறு நமக்குத் தேவையில்லை.

பிழிந்த பழங்கள் ஒவ்வொன்றையும் மேலும் இரண்டு துண்டுகளாக குறுக்காக வெட்டிக் கொள்ளவும்.

அதிலிருக்கும் சுளைகளின் சக்கைகளை முழுவதும் களைந்து எடுத்து விடவும்.

இந்த தோல்களை நான்கு முதல் ஐந்து நாட்கள் நிழலில் காற்றில் உலர வைக்கவும். உடையும் பதத்திற்கு காயவைத்து எடுத்துக் கொள்ளவும்.

தோல்கள் நன்கு காய்ந்த உடன் அதனை சிற்றரவை (மிக்ஸி)

 அல்லது அரைப்பான் (பிளண்டர்) ஏதேனும் ஒன்றில் இட்டு மிக மிகத் தூளாக்கி அரைத்துக் கொள்ளவும்.

அரைத்த பொடியை நன்றாக சலித்து எடுத்து காற்று புகாத கண்ணாடிக் குவளையில் அல்லது நெகிழிக் குவளையிலோ எடுத்து  வைத்துக்

கொள்ளவும்.


இதனை தினமும் இலேசான வெதுவெதுப்பான வெந்நீரில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து கலந்து குடிக்கவும். 


சில நாட்களிலேயே அதிக பலன் கிடைக்கும்.


 ஆங்காங்கே இருக்கக்கூடிய கொழுப்புகள் கரைந்து உடல் எடையும் அதிக வனப்புடன் மேனியும் புத்துணர்வுடனும் காணப்பெறுவர்.

மேலும் அதிக சுறுசுறுப்புடனும் செயல்படுவர். ஆதலால் ஆரஞ்சுப் பழத்தோலை குப்பையில் தூக்கிப் போடக்கூடாது. இது போன்ற மருத்துவப் பலன்களைப் பெற்று பயனடைந்து கொள்ளுங்கள்.





டாக்டர். செ. பியூலா செல்வமணி 


(மருத்துவ பயிற்சியாளர்)


அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி