தேசிய சக்தி சேமிப்பு தினம்
டிசம்பர் 14: தேசிய சக்தி சேமிப்பு தினம்

அதனாலேயே நிலக்கரி, கச்சா எண்ணெய், மின்சாரம் என பல ஆற்றல் சக்திகளும் குறைந்து கொண்டே வருகின்றன. இவை இன்று கிடைப்பது போலவே, எதிர்காலத்திலும் கிடைக்கும் என சொல்ல முடியாது. இன்னும் ஐம்பது ஆண்டுகளில் ஆற்றல் தட்டுப்பாடு ஏற்படும் என ஆராய்ச்சியாள ர்கள் எச்சரிக்கின்றனர். ஆற்றல் சக்திகளை சிக்கனமாக பயன்படுத்த வலியுறுத்தியும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், நவ., 14ம் தேதி தேசிய ஆற்றல் சேமிப்பு தினம் கடைபிடிக்கப்படுது. 

எரிசக்தியை குறைவாக பயன்படுத்தினால் அதுதான் சேமிப்பு. எரிசக்தி சேமிப்பு என்பது, எரிசக்தி உற்பத்திக்கு சமம். எரிசக்தியை உற்பத்தியைவிட, அதிகமாக செலவழித்து வருகிறோம். இந்தியாவில் ஆற்றல் வளங்கள் குறைவாகவே உள்ளன. நாம் இறக்குமதியைத் தான், அதிகம் சார்ந்திருக்கிறோம்.


* மின்சாரத்தை அவசியத்துக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். மின்சார சேமிப்பு, நமக்கு பணத்தையும் சேமிக்கிறது. எதிர்காலத்தில் சூரியசக்தி மின்சாரம் முக்கிய பங்கு வகிக்கும்/ வகிக்க வேண்டும்
* மின்சாரத்துக்கு அடுத்தாக, வாகனப் பயன்பாடு. கச்சா எண்ணெய் விலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. இதன் விலையை பொறுத்தே, அனைத்து பொருட்களின் விலையும் உள்ளது. வாகனத்தை தேவைக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
* சமையல் எரிவாயு சிக்கனமும், அவசியம் பின்பற்ற வேண்டும்.
* ஆற்றல் சேமிப்பு என்பது, வீட்டில் தொடங்கி, நமது தெரு, பள்ளி, அலுவலகம், ஊர், மாநிலம் என பயணித்து, இந்தியா முழுவதும் ஆற்றல் சேமிப்பை நடைமுறைப்படுத்த வேணுங்கறோம்

Comments