காதோடுதான் நான் பேசுவேன்'’ எல்.ஆர்.ஈஸ்வரி. எல் ஆர் ஈஸ்வரி.

 


#hbdlreaswari

காதோடுதான் நான் பேசுவேன்'’ பாடலில் எண்ணற்ற ரசிகர்களை தன் ரகசிய சினேகிதன் ஆக்கினார் எல்.ஆர்.ஈஸ்வரி.

எல் ஆர் ஈஸ்வரி.


 திரைப்படப் பாடல்கள் மற்றும்  பக்தி பாடல்கள் குறிப்பாக அம்மன் பாடல்கள் பாடி தனக்கென தனி இடம் பிடித்தவர் எல் ஆர் ஈஸ்வரி அவர்கள்.


 ஒரு முறை இவர்   மேடைக் கச்சேரியில் பாடும் போது, திருச்சி லோகநாதன் அவர்கள் வித்தியாசமான குரலைக் கேட்டு  சினிமாவில் பாடல்கள் பாட சிபாரிசு செய்தார்.


 அம்மையாரின் குரல் வித்தியாசமானதாகவும் இருந்ததால்  1960 களில் இவர்களது பாடல்கள் மக்களைக் கவர்ந்தன.


 குறிப்பாக சிவந்தமண் படத்தில், பட்டத்து ராணி பார்க்கும் பார்வை பாடலில் இடையே வரும் ஒரு அம்மிங், கேட்பவரை மெய்சிலித்து வைக்கும்.


  ஆலயமணியில்  கல்லெல்லாம் மாணிக்க கல்லாகுமா, பாதகாணிக்கையில் ஒரு  வீடு வரை உறவு பாடல்களில் இவரது அம்மிங் என்றும் மறக்க முடியாது.


 கேட்டுக்கோடி உருமி மேளம், முத்து குளிக்க வாரிகளா, எலந்த பழம், கண்ணில் தெரிகின்ற வானம், காதோடு தான் நான் பேசுவேன், நாம் ஒருவரை  ஒருவர் சந்திப்போம்  போன்ற  பல பிரபலமான பாடல்களை பாடி அசத்தியவர் எல். ஆர் ஈஸ்வரி அவர்கள்.


 அம்மன் பாடல்களா ன செல்லாத்தா மாரியாத்தா, திருவேற்காடு கருமாரி, கற்பூர நாயகியே கனகவல்லி, மகமாயி சமயபுரத்தாளே  பாடல்கள் பக்தி பாடல்கள் இவரது குரலில்  என்றென்றும் ஒலிக்கும் பக்தி பாடல்கள்.


 கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சென்னை தியாகராய நகரில், தியாகராயர் மஹாலில் இவருக்கு பாராட்டு விழா நடைபெற்றது. அதில் எனக்கும் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. எல் ஆர் ஈஸ்வரி அம்மையார்  என்றும் நலமுடன் வாழ்க. முருக. சண்முகம், , சென்னை 


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,