உடல் எடையால் ஆண்களுக்கு ஆபத்து..
உடல் எடையால் ஆண்களுக்கு ஆபத்து..
அதிக உடல் எடை காரணமாக திடீரென மரணம் ஏற்படும் வாய்ப்பு பெண்களைவிட ஆண்களுக்கு 3 மடங்கு அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. உடலின் எடை சராசரியாக இருக்கும் வரையில் எந்த பிரச்னையும் எழுவதில்லை. ஆனால் அதையும் தாண்டி உடல் எடை, அதிகரிக்க, அதிகரிக்க பக்க விளைவுகளும் அதிகரிக்கும். உலகம் முழுவதும் 40 மக்களிடம் எடுக்கப்பட்ட ஆய்வின் முடிவில் அதிக உடல் பருமான மக்கள் சாதாரண எடையில் உள்ளவர்களைவிட மூன்று வருடங்கள் முன்னதாகாவே உயிரிழ்ந்து விடுவதாக கூறப்பட்டுள்ளது.
இதேபோல், வயது முதிர்ச்சிக்கு முன்பே அகால மரணம் ஏற்பட அதிக உடல் எடை காரணமாக அமைகிறது என்றும், இந்த ஆபத்து பெண்களைவிட ஆண்களுக்கு மூன்று மடங்கு அதிகம் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது. அதிகப்படியான எடையுள்ள மக்கள் தங்கள் ஆயுட் காலத்தில் 10 வருடங்களை இழப்பதும் ஆய்வின் முடிவில் தெரியவந்துள்ளது.
Comments