வதந்தி வெப் சீரிஸ் ( இணையத் தொடர்) சீரிஸ் பற்றிய என்னோட கண்ணோட்டம்

 

 


சமீபத்தில் அமேசான் பிரைம் ஓ ட் ட்டி யில் நான் பார்த்தது

 

 வதந்தி  வெப் சீரிஸ்  ( இணையத் தொடர்)

இந்த வெப்சீரிஸ் பற்றிய என்னோட கண்ணோட்டம் இதோ

நடிகர்கள்: எஸ்ஜே சூர்யா, நாசர், லைலா, சஞ்சனா

இசை: சைமன் கிங்

இயக்கம்: ஆண்ட்ரூ லூயிஸ்

ஓர் இளம்பெண் மர்மமான முறையில் பிணமாகக் கண்டெடுக்கப்பட  அவர் இறந்தது எப்படி? எதனால்? என்பதைக் காவல்துறையினர் கண்டுபிடிப்பதுதான்

மொத்தம்  எட்டு பாகங்கள்

அறிமுக இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ். வெலோனியை கொன்றது யார் என்கிற பதை  என்கிற ஒரு ஒற்றை ஸ்டோரி லைனை வைத்துக் கொண்டு பக்காவான கிரைம் த்ரில்லர் புலனாய்வுத் திரைப்படத்தை தந்திருப்பதை கட்டாயம் பாராட்ட வேண்டும்

வெலோனி எப்படிப்பட்டவள்? நல்லவளா? கெட்டவளா? பல ஆண்களுடன் அவளுக்கு இருக்கும் பழக்கம் என்ன? அவரது கொலை வழக்கை விசாரிக்க வரும் எஸ்.ஜே. சூர்யா இத்தனை கேள்விகளால் எப்படி குழம்பித் தவிக்கிறாரோ அதே போல வெப்சீரிஸ் பார்க்கும் ரசிகர்களையும் பித்துப் பிடிக்க வைத்து கடைசியாக குற்றவாளி ரிவீல் செய்யும் கதை தான் இந்த வதந்தி.

. சுழல் வெப்சீரிஸை தொடர்ந்து விக்ரம் வேதா இயக்குநர்கள் புஷ்கர் - காயத்ரி இந்த வெப்சீரிஸை தயாரித்து அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியிட்டுள்ளனர்.

சுழல் வெப்சீரிஸில். கடைசி வரை அந்த காமுகன் யார், கொலையாளி யார் என்கிற கோணத்திலேயே அந்த கதை சுழன்று அடிக்கும் அதே போலத்தான் இந்த வதந்தி வெப்சீரிஸும் கடைசி வரை வெலோனியை கொன்றது யார் என்கிற ட்விஸ்ட் உடன் கிரைம் த்ரில்லர் பார்ப்பவர்களை ஈர்த்துவிடும்.

சாதரணமான  இணையத் தொடர் என்று சொல்ல முடியாது

 பல சம்பவங்கள் விசாரணைகள் இப்படி பல கோர்வையான காட்சிகள்  கொண்ட திரைக்கதை மூலம் கவனம்  செம திரிலிங்காக  நகர்கிறது இந்த தொடர்

.

மர்மமான முறையில் இறந்த கதாநாயகி வெலோனி(சஞ்சனாவின்) வழக்கை விசாரிக்க வரும் உதவி ஆய்வாளர் வேடத்தில்  நாயகன் எஸ்.ஜே.சூர்யா நடித்து அசத்தியிருக்கிறார்.  

வழக்கத்துக்கு மாறாக அமைதியாக அழுத்தமாக நடிப்பு.ஆங்கில படங்களுக்கிணையாக  விசாரணைக்காட்சிகள் , துப்பறியும் காட்சிகள் என பல இடங்களை சொல்லலாம் எஸ்ஜே சூர்யாவை இந்த வெப்சீரிஸில் கம்ப்ளீட்டாக அடக்கி வாசிக்க வைத்து வெறும் பார்வையாலே பல இடங்களில் நடிக்க வைத்திருப்பது எல்லாம் தரமான செய்கை.

 மனைவியுடன் எரிந்து விழும் காட்சிகளில் மட்டும் இயல்பான நடிப்பு வெளிப்படுகிறது. வட்டார வழக்கை வெப்சீரிஸ் முழுவதும் கையாண்டுள்ள விதமும் ஒவ்வொரு முடிச்சுகளை அவிழ்த்து விசாரிக்கும் விதத்திலும் எஸ்ஜே சூர்யா எதார்த்தத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

 

நடிகர் எஸ்.ஜே.சூர்யா முதல்முறையாக வதந்தி மூலம் ஓடிடியில் கால் பதித்திருக்கிறார். இதிலும் அவர் வெற்றி கண்டு இருக்கிறாரா என்றால்? ஆம், என்று சொல்லலாம்

, ஆணித்தரமாக. இவரது  நடிப்பும், தெற்கத்திய பாணி யில  பேசும் வசன உச்சரிப்பும் படத்துக்கு பக்கபலமாக அமைந்து கதாபாத்திரத்திற்கு வலு சேர்த்து இருக்கிறது.

 

குறிப்பாக துப்பு துலக்கும் காட்சிகளிலும், குடும்பம் சம்பந்தப்பட்ட, மற்றும் போலீஸ் சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் ஒவ்வொரு இடத்திற்கு ஏற்ப கலவையான நடிப்பை சரிவர பிரித்து காட்டி மீண்டும் ஒருமுறை கைத்தட்டல் பெற்றிருக்கிறார்

. இவரது ஸ்கிரீன் ப்ரெசன்ஸ் இந்த வெப்சீரிஸ்க்கு மிகப்பெரிய பிளஸ் ஆக மாறி இருக்கிறது. படம் முழுக்க நாம் இவருடன் பயணிக்கிறோம். எப்படியும் அவர் கொலையாளியை கண்டுபிடித்துவிடவேண்டும்  என நம்மை அவருடன் இணைத்துவிடுகிறார்

குடும்ப பாங்கான கணவனாக  மனைவியுடனான(ஸ்மிருதிவெங்கட்) ஊடல் கூடல் காட்சிகளில் அவர் நடிப்பு மிக சிறப்பு.

 எஸ்.ஜே.சூர்யாவின் மனைவியாக நடித்திருக்கும் ஸ்மிருதிவெங்கட் சிறப்பு. கணவரிடம் கோபித்துக் கொண்டு அப்பா வீட்டுக்குச் செல்லும் காட்சிகள் அருமை. இறுதிக்காட்சியில் கணவருக்கு ஆறுதல் சொல்லும காட்சிகள் அருமை

கதையின் நாயகி வெலோனியாக சஞ்சனா, இளமையும் அழகும் நிறைந்த அழகி.  தொடர் முழுவதும் அப்பாவித்தனமான முகம் வெள்ளந்தியான சிரிப்புடன் , அன்புக்கு ஏங்கும் பெண்ணாக அசத்தல் நடிப்பு தன் கண்களிலேயே எல்லா பாவங்களையும் காட்டியிருக்கிறார். இவரது துரு துரு நடிப்பும், அழகான முகபாவனைகளும் பார்ப்பவர்களை கவர்ந்திருக்கிறது

 

சர்தார் படத்திற்கு பிறகு  லைலா. இந்தத்தொடரில்

 ஆங்கிலோ இந்தியப் பெண் வேடம் பொருத்தமாக இருக்கிறது

 தொடர்  முழுவதும்  ஆங்கிலத்திலேயே வசனங்கள்

.கணவரை இழந்து தன் பெண்ணுடன் தனியாக வாழும் தாயின் உணர்வுகளைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார்கதை முடிவில் அதிர்ச்சி தருவதை ஏற்கமுடியல

சின்ன சின்ன கதாபாத்திரங்களாக இருந்தாலும் மனதில் நிற்கும் படியான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இந்த கதாபாத்திரமும் அதேபோல அமைந்து மனதில் பதியும்படி இருக்கிறது. இவரது அனுபவ நடிப்பும் அதற்கேற்ற முக பாவனைகளும் இவரின் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்து காட்சிகளுக்கு வலு சேர்த்து இருக்கிறது.

 

வெலோனி வழக்கை முதலில் விசாரிக்த காவல்துறை உதவி ஆய்வாளராக வரும் விவேக்பிரசன்னா மிக இயல்பு . பல இடங்களில் சிரிக்கவைத்தும் . சில இடங்களில் சிந்திக்க வைத்தும் சீரியசான கதையை தொய்வாக மல் பார்த்துக்கொள்கிறார் அவர் தன் .மனைவிக்கு தோசை சுட்டுப்போடும் காட்சி அழகு.

தொடரில் வரும் எழுத்தாளர் கதாபாத்திரம் அழுத்தமானது.அதற்கு நூறு விழுக்காடு பொருத்தமாக இருக்கிறார் நாசர்.

வெலோனியைத் திருமணம் செய்யப்போகும் இளைஞராக நடித்திருக்கும் குமரன் தங்கராஜன், இக்கால இளைஞர்களின் பிரதிநிதியாக இருக்கிறார்.

 

என்ன கதாபாத்திரமாக இருந்தாலும் மனதில் பதியும்படி நடித்து சென்று இருக்கிறார் ஹரிஷ் பெரொடி.

 முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் அருவி பாலாஜி கதைக்கு ஒத்துப் போகும் வகையில் இருக்கும் கதாபாத்திரத்தில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

வில்லன் பலனாக நடித்திருக்கும் சைத்தான் பட இயக்குநர் பிரதீப் குமார் மிரட்டியிருக்கிறார்

, அவினாஷ், அஸ்வின்குமார், ஆதித்யா, வைபவ் முருகேசன், அஸ்வின்ராம், , திலீப்சுப்பராயன்,குலபுலி லீலா உட்பட பலர் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும் தங்களின்  சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்

.  . படத்தின் கதையையும், திரைக்கதை இயக்கத்தையும் அறிமுக இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் செய்து இருக்கிறார். வெப்சீரிஸின் முதல் எபிசோடிலேயே இறந்தது யார் என ரிவீல் செய்து விடும் இயக்குநர், அதன்பிறகு எஸ்.ஜே.சூர்யா அறிமுகமானதிலிருந்து கொலையை இவர் செய்திருப்பாரா? அவர் செய்திருப்பாரா? இல்லை அவர்தான் செய்திருப்பாரோ? என கிளைமாக்ஸ் காட்சி வரை யூகிக்க முடியாத படி யோசிக்க வைத்து பாஸ் மார்க் வாங்கியிருக்கிறார்.

. நாகர்கோயில் வட்டார வழக்கு, கிறித்துவர்களிலேயே பணக்காரர்களின் இறப்பு நடைமுறை, ஏழைகள் வீட்டில் இறப்பு நடைமுறை, காவல்துறையில் இருக்கும் அடுக்குகள் அதன் அளவுகோல்கள், குடும்ப உணர்வுகள், வனங்களை அரசாங்கம் எடுத்துக்கொண்டதால் பாதிக்கப்படும் வனமக்கள் நிலை உள்ளிட்ட ஏராளமான நுட்பமான விசயங்களை சேகரித்து அதனை திரைக்கதைக்குள் வைத்திருப்பதை பாராட்டவேண்டும்

இணையத் தொடர்கள் என்றால்   ஆபாச வார்த்தைகள் அத்துமீறிக்காட்டப்படும் பாலியல் உணர்வுகள் இருக்க வேண்டும் போல இந்த  தொடரும்  இதற்கு விதிவிலக்கல்ல

ஒளிப்பதிவு செய்திருக்கும் சரவணன், கதையைக் காட்சி அனுபவமாக மாற்றக் கடுமையாக உழைத்திருக்கிறார். கன்னியாகுமரி மற்றும் மலைக்காடு சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக ஒளிப்பதிவு செய்யப்பட்டு ஹாலிவுட் தரத்தில் இருக்கிறது

. சைமன் கே கிங் இசை தொடரின் தன்மையை உள்வாங்கி உணர்த்தியிருக்கிறது.எங்கு சைலன்ட் இருக்க வேண்டுமோ அங்கு அமைதியாகவும் எங்கு ஒலி தேவையோ அங்கு சிறப்பான பின்னணி இசையை கொடுத்து காட்சிகளுக்கு திகில் கூட்டி ரசிக்க வைத்துள்ளார்

 

    சாதாரண ஒரு இளம்பெண் வழக்கு என்றால் இவ்வளவு கவனம் பெறாது என்பதற்காக ஒரு நடிகையுடன் வழக்கைத் தொடர்புபடுத்தியும்  அவ்வழக்கு தீவிரம் ஆக ஓர் அரசியல்தலைவரையும் அதனுடன் கோர்த்துவிட்டிருப்பது ஆகியன இயக்குனரின் புத்திசாலித்தனம்.

வெலோனி என்ற ஒரு கதாபாத்திரத்தை வைத்துக் கொண்டு அதை படம் முழுவதும் படர செய்து அதன் மூலம் காட்சிகளை விரிவுபடுத்தி, நேர்த்தியான துப்பு துலக்கும் காட்சிகளை சரியான இடங்களில் கோர்த்து அவைகளுக்கு அழகாக உயிர் கொடுத்த இயக்குனர் தொடரை நீடிக்கவேண்டும் என்பதற்காக   பல காட்சிகளை நீட்டித்தும், விரிவாக சொல்வதற்கு  பல்வேறு கிளைக்காட்சிகளை  திணித்திருப்பது  கொஞ்சம் இழுபறியாக இருப்பது போல் தோன்ற வைக்கிறதுநாசர் கதையில் வரும் சில காட்சிகள்  நம் கவனத்தை திசை திருப்புவது போலதான் தெரிகிறது

காவல் துறை உயர் அதிகாரி இந்த கேஸை  மீண்டும் விசாரிக்கக்கூடாது என சூரியாவை அடிக்கடி கடிந்து கொள்வதற்கு சரியான காரணம் இல்லை

சுழல் வெப்சீரிஸ் அளவுக்கு வதந்தி வெப்சீரிஸில் ஒரு பரபரப்பு இல்லை என சொல்லலாம்

இந்த வெப்சீரிஸும் ஒவ்வொரு எபிசோடுகளாக முடியும் தருவாயில் அடுத்தடுத்து எபிசோடுகளை பார்க்கும் வகையில் திருப்பங்களை வைத்து அதன் மூலம் ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குநர் ஆண்ட்ரூ லூயிஸ்

6 எபிசோடுகளாக முடித்திருக்க வேண்டிய இந்த வெப்சீரிஸை அமேசான் பிரைமுக்காக 8 எபிசோடுகளாக இழுத்தடித்ததை தவிர்த்து இருக்கலாம்.

 இருந்தும் காட்சிகளின் நேர்த்தியும், கதை நடக்கும் இடத்தின் போக்கும் கதையோடு பின்னிப் பிணைந்து செல்வது படத்தோடு நம்மை ஒட்ட வைக்கிறது. அதுவே படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது. பொதுவாக மர்டர் மிஸ்டரி படம் என்று வந்துவிட்டால் ஒரு கொலையை யார் செய்திருப்பார்கள் என யூகிக்க முடியாதபடி இருப்பது தான் அதனுடைய வெற்றிக்கு மையப்புள்ளியாக இருக்கும்

. அந்த மையப்புள்ளி இந்த வெப்சீரிஸிலும் சரிவர அமைக்கப்பட்டு கடைசி வரை இந்த கொலையை யார் செய்திருப்பார்கள் என்று யூகிக்க முடியாத படி இருந்துள்ளது

OTT பிரியர்களுக்கு ஒரு நல்ல திரில்லிங் படம்

இப்போ இந்த மழைக்கு ஒரு நல்ல சுவாரஸ்யமான  பொழுது  போக்கு நமக்கு வீட்லனு சொல்வேன்

 VIDEO VERSION--ருத்ரா


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,