சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் :
சர்வதேச அடிமை முறை ஒழிப்பு நாள் :
சாதி, மதம், இனம், மொழி, நிறம், அரசியல், நாடு, சமூகம், பண்பாடு போன்ற அளவுகோள்களில் அடிமைப்படுத்தப்பட்டவர்களை அதில் இருந்து மீட்டெடுக்கும் வகையில் , “நாம் யாரும் அடிமையில்லை, நமக்கு யாரும் அடிமையில்லை” என்ற அரசியல் முழக்கத்தை செவிமடுத்த ஐ.நா அவையானது 1986 ஆம் ஆண்டு முதல் டிசம்பர் 2 ஆம் தேதி சர்வதேச அடிமைகள் ஒழிப்பு நாளை அனுசரித்து வருகிறது.
நவீன அடிமைகள் கலாசாரம் பரவி வருவதால், உலகம் முழுவதும் அடிமை வாழ்க்கை வாழ்பவர்களின் எண்ணிக்கை இந்த இந்த ஆண்டு 23 சதவிகிதம் அதிகரித்துள்ளது. நாட்டிற்கோ, சமூகத்துக்கோ, கலாசாரத்துக்கோ னிப்பட்ட நபருக்கோ உலகில் யாரும் யாருக்கும் அடிமையாக இருக்கக் கூடாது என்கிறது ஐ.நா...அதே நேரத்தில் அடிமை, கொத்தடிமை முறை ஒழிப்பு என்பது அரசாலோ, தனி நபராலோ, தனி இயக்கங்களாலோ ஊடகங்களாலோ சாத்தியமாகும் சாதாரணமான விஷயமல்ல. அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டிய பணி. முதலில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ...
சகமனிதனை மனித மாண்புடன் நடத்தும் மனநிலை ஒவ்வொருவருக்குள்ளும் மலரவேண்டும்...ரோமாபுரி அடிமை முறை ஒழிந்துவிட்டது; அமெரிக்கா அடிமை முறை ஒழிந்துவிட்டது; ரஷ்யா அடிமை முறை ஒழிந்துவிந்துவிட்டது. நாமும் ஒழித்துவிட்டோம்; அடிமை முறை என்ற வார்த்தையை மட்டுமே...
ஆனால் அடிமை முறை இன்னும் அப்படியே."- ஜார் மன்னரின் ரஷ்யாவைப் பற்றி எழுதும் போது லியோ டால்ஸ்டாய் சொன்னது இது. நாமும் நம்நாட்டில் அடிமைகள், கொத்தடிமைகள் இல்லை... எனச் சொல்லிக்கொள்ளலாம்; அவ்வளவு தான்...
Comments