மக்கள்திலகம்நினைவு_தினம்

 மக்கள்திலகம்நினைவு_தினம்

24/12/1987எனக்கு ஒரு பத்து அல்லது பன்னிரண்டு வயதிருக்கும். என் மனதில் எழுந்த எண்ணங்களின் பிரதிபலிப்பை அவரின் படங்களிலே, பாடல்களாக, வசனங்களாக, நடிப்பாக காணத் தொடங்கினேன். மனித நேயம், பண்பாடு, இனிமையான பேச்சு, ஆறுதலும் நம்பிக்கையும் தரும் வசனங்கள், துணிச்சல், இரக்கம் இவையெல்லாம் அவர் படங்களிலே சரள பிரளயமாக ஓடி வருவதால் அவர் மேல் எனக்கு ஈடுபாடு அதிகமானது.


தொடர்ந்து என் கல்லூரி நாட்கள், இருபதுகளில் நான் முகம் கொடுத்த சோதனை மிக்க காலம் இவற்றின் போதெல்லாம் அவர் எனக்கு ஒரு வழிகாட்டியாக, மனதில் தைரியம் ஊட்டி, தொடர்ந்து முன்னே செல்ல முன்னோடியாக இருந்தார். 


என்னைப் போல லட்சக்கணக்கானவர்களுக்கும் முன்னோடியாக இருந்தார். திரையிலும், பொது வாழ்விலும், அரசியலிலும் தனக்கேற்பட்ட சோதனைகளை எல்லாம் சாதனைகளாக்கி தமிழக முதல்வராக உயர்ந்து, பதினொரு வருடங்கள் தொடர்ந்து முதல்வராக இருந்து சாதனை படைத்தார். அவரைப் பற்றி நான் எழுத ஆரம்பித்தால், அது தொடர்கதையாக இருக்கும். அப்படி என் மனதிலே ஆழப் பதிந்தவர் அவர். அவரின் அங்க அசைவுகளெல்லாம் எனக்கு அத்துப்படி.காலக் கணக்கனின் இலக்கிற்கு ஆளாகி 1987 டிசம்பர் 24ம் திகதி கருக்கிருட்டில், சூனியத்தில் மறைந்து போனாலும், உயிருள்ளவரை என் உள்ளத்தில் மட்டுமல்ல, கோடிக்கணக்கான தமிழ் நெஞ்சங்களில் வாழும் அவர், அவரின் பாடல்களுக்கெல்லாம் ஓர் உன்னத உதாரணம்.


அவரின் வசனங்களையும், பாடல்களையுமே கேட்டுக் கேட்டு வளர்ந்தவன் நான். அதிலே மிக உயர்வாக என்னைக் கவர்ந்த பாடல்கள் பல நூறு. ஒரு வசனம் - "மற்றவர்கள் திருந்துவதற்கு உதாரணமாக இருக்க வேண்டுமே தவிர, கெட்டுப் போவதற்குக் காரணமாக இருக்கக் கூடாது" என்பதுதான்.


இன்றளவும் அவரை நேரில் பார்க்கக் கொடுத்து வைக்கவில்லையே என வருத்தப்படத்தான் செய்கிறேன். அவரைக் குறை சொல்லும், இழித்துப் பேசும் எவரைப் பற்றியும் எனக்கு அக்கறையும் இல்லை, அதற்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியமும் இல்லை. ஆகவே அவரைப் பற்றிய எதிர்க்கருத்து சொல்பவர்கள் இங்கே அதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். 'உங்களால் யாருக்காவது நன்மை விளைந்திருக்கிறதா' என்று மனதைத் தொட்டுக் கேட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள்.


அவரைக் காலன் கவர்ந்த இந்த நாளில் அவருக்குப் பாத வணக்கம் செய்கிறேன். அவருக்கு என் கண்ணீர் அஞ்சலி!!!


"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் - உன் போல யாரென்று ஊர் மட்டுமல்ல, முழு உலகமே சொல்கிறதே" - வாழ்க மக்கள் திலகம் நாமம்!! வளர்க அவர் புகழ் என்றென்றும்!!!


LOGANATHAN/
COLOMBO.SRILANKA


Comments

Kavirimaindhan said…
Heart touching article 💙
Unknown said…
தலைவர் மறைந்து 35 ஆண்டுகள் ஓடினாலும், இஇன்று வரை மக்களின் மனதில் நீங்கா இடம் பெற்ற மாபெரும் மன்னன். அவரது புகழ் மற்றும் பெயர் இந்ந உலகில் இன்னும் பல ஆண்டுகள் நீங்கா இடம் பெறும் என்பதில் எவ்வித ஐயமும் இல்லை!!!

Popular posts from this blog

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,