மைசூர் சிங்கம் ஹைதர் அலி
மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலி காலமான தினமின்று

வீரம், மானம், தியாகம் இவையெல்லாம் வர்க்கங்களுக்கு அப்பாற்பட்டவை. வர்க்கங்களுக்கிடையேயான போராட்டங்கள் உலகின் போக்குகளை மாற்றியிருக்கின்றன. பல நேரம் ஏழை வர்க்கத்தில் தோன்றிய சாமான்யர்களால் வரலாறுகளையே திணறடிக்கவும் முடிந்திருக்கிறது.அப்படியரு வரலாற்று பெருவீரன்தான் ஹைதர் அலி. ஹைதர் என்றால் சிங்கம் என்று அர்த்தம். ஆங்கிலேயர்களின் ஆதிக்கப் போருக்கு எதிராக கர்ஜித்த மைசூர் சிங்கம்தான் ஹைதர் அலி.
மைசூர் மன்னர் கிருட்டிணராச உடையாரிடம், சாதாரண படை வீரர்களாக ஹைதர் அலியும், அவரது அண்ணன் ஷாபாஸ் சாஹிபும் பணியில் சேர்ந்தனர்.1749ல் நடைபெற்ற தேவனஹள்ளிப் போரில் இவர்கள் காட்டிய வீரமும் தீரமும் மன்னரை வியப்பில் ஆழ்த்தியது. இதனால் குதிரைப் படைக்குத் தளபதி ஆனார். மைசூர் ஆட்சியின் ஒரு பகுதியாக இருந்த திண்டுக்கல்லை நிர்வகிக்கும் பொறுப்பை ஹைதர் அலிக்கு வழங்கினார்.
பிரெஞ்சுக்காரர்களுக்கு மிகவும் விசுவாசியான இவர், ஆங்கிலேயர்களுக்கு எதிரான அணியில் போராடினார்.
ஹைதர் அலியின் போர்திறன் வரலாற்று அறிஞர்களால் இன்றளவும் மிகவும் பாராட்டப்படுகிறது. தமது சமகால எதிரிகளை விட போர் நுட்பத் திறன்களில் கவனம் செலுத்தினார். ஆங்கிலேயர் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகே, ஏவுகணைகளை தமது படைகளில் மேம்படுத்தி புகுத்தினர். ஆனால்,அலி ஐரோப்பிய ஆய்வாளர்களைக் கொண்டு ஏவுகணை உருவாக்கி போரிட்டார். உலக ஏவுகணை வரலாற்றில் அலி முயற்சிகள் போற்றப்படுகிறது. அலியின் ஏவுகணைகள்: அட்டைக்கு பதிலாக உலோகக் குழாய்களைக் கொண்டு, 10அடி உயரமுள்ள மூங்கில்களை பயன்படுத்தி ஏறத்தாழ6கிலோ எடையுள்ள, நூற்றுக்கணக்கான ஏவுகணைகளைத் தயாரித்தார். இதன் செயலாக்கத்தைக் கண்டு, ஆங்கிலேயப் படை சிதறி ஓடியது.
பின்னாளில் உடல்நிலை, முதுகுத் தண்டுவடப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டது. அதனால், அவரது உடல், இயங்க முடியாமல் முடங்கியது. அப்போது அவருக்கு வயது 60. கண்களில் விடுதலை கனவுகளோடு திரிந்த, புரட்சியாளரின் உடல் 1782 இதே டிசம்பரில் ஆந்திர மாநிலம் சித்தூர் அருகே அவரது உயிர் பிரிந்தது.
மகன் திப்பு சுல்தானின் வேண்டுகோளை ஏற்று, ஐதர் அலியின் உடல், சிறீரங்கப்பட்டினம் எடுத்து வரப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது.
Comments