தேவமைந்தனே

 கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்

********************

 தேவமைந்தனே

=================



 மன்னிக்கும் குணம் தான்


 இம்மண்ணில் உம்மை உயர்த்தியது


 மறவாது  உன்  திருநாளை


 மதித்தே உலகம் பாராட்டுது


 கர்த்தர் தரும் நல்லாசியென்றும்


 காலம் முழுவதும் துணைநிற்கும்


 கவலை தீர வழி பிறக்கும்


 காவலாய்  எந்நாளும்  தாங்கி நிற்கும்


 ஒவ்வொரு நாளும் உன் திருநாமம்


 சொல்லி மகிழும் போது புத்துணர்வே


 எல்லாவகையிலும் எமைக்  காக்கும்


 என்றும் தரும் நிலையில் உயர்வே



 சோதனையைக்  கண்டீர் உம்  வாழ்வில்


 சாதனையாய் மாறியது  உயர் வடிவில்


 தத்துவங்கள் சொன்னீர் மக்களுக்கெல்லாம்


 உன் தரிசனமோ  அதிசயம் எனலாம்


 அனைத்துக்கும் நலனாய்  அமைந்திடும்


 உன் அன்பு என்றும் பெரியது


 அனுதினம் உனை தொழுதாலும்


 ஞாயிறு பிரார்த்தனையும் பெரியது


 எங்கள் மனதில் குடிகொண்ட


 இறைவனே  உம்  கொள்கை பெரியது


 இயல்பாய் அமைந்த உன் செய்கை


 இவ்வுலகில் என்றும் மிகப்பெரியது


         ********************   

                        

     


      முருக.சண்முகம்


Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி