குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம்

 செங்கல்பட்டு மாவட்டம்


குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருநீர்மலை பகுதியில் குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம்

பல்லாவரம்:06  செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் உள்ள திருநீர்மலை பகுதியில் உள்ள  சிவராசன் தெருவில் நேற்று (05.12.2022) மாலை 5 .30 மணி முதல் இரவு 7 மணி வரை குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.

இனிய உதயம் தொண்டு நிறுவனத்தின் நிறுவனர் திருமதி கோமளா அவர்களின் தலைமையில் நடைப்பெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக AHB திரு விஜய் பர்மர், திரு.அலங்காரம், ACDS திரு தேவன்பு ஆகியோர் கலந்துகொண்டனர்.

குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களின் செயல் திட்டங்களை பற்றி விவாதித்தனர். இந்த நிகழ்வில் திருநீர்மலை பகுதியில் உள்ள குழந்தை உரிமை பாதுகாப்பு குழுக்களை சேர்ந்த நிர்வாகிகள் 20க்கு மேற்பட்டோர் கலந்துகொண்டு தங்களின் செயல் திட்டங்களை பற்றி தெளிவுபடுத்தினர் 5 ஆண்டுகள் கடந்த நிலையில் குழந்தை பாதுகாப்பு குழுக்கள் எவ்வாறெல்லாம் செயல்பட்டனர், எவ்வாறெல்லாம் சவால்களை  சந்தித்தனர்  என்பதை மிகத் தெளிவாக சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் விளக்கினர். 

இதனை தொடர்ந்து குழந்தை பஞ்சாயத்தில் உள்ள குழந்தைகளிடம் குழந்தை உரிமையை பற்றி கேட்டார் திரு அலங்காரம் அவர்கள். குழந்தைகள் அருமையாக நான்கு அடிப்படை உரிமைகளை சொல்லி அசத்தினர்.
Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,