உலக மண்வள நாள்

 உலக மண்வள நாள்




*

நிலத்திலும் 

முத்தெடுக்கலாம் 

வேர்க்கடலை .

*

மண்ணைத் தோண்டி கிழங்கெடுத்தேன்  கருணையின் வாசனை.

மண்ணுக்கு மசக்கை

வயிற்றில் நெளிகிறது 

மண்புழு.

*

நெகிழி மாவிலைத் தோரணம் 

மாந்தோப்பை அழித்துக் கட்டிய வீடுகள் 

*

வற்றியது நிலத்தடி நீர் எலும்பு கூடாய் நிற்கும்  நகரங்கள்.

*

மின்னணு குப்பை சொல்லவில்லையா 

நம் அறிவே குப்பை என.

*

பூந்தொட்டியை குப்பைத் தொட்டி ஆக்குகிறோம்  அழுகிறது பூமி.

*

விருந்துக்கு வந்தவன் வீட்டை கொளுத்துகிறான்  எரிகிறது பூமி.

*

 பூப்பறி பூச்செடியை பறிக்காதே 

பூமியின்  வேண்டுகோள்.

*

ஒருஉலக புல் ஒரு பூச்சி 

வாழும் வரை 

இவ்வுலகம் வண்ணமயம்.

*

என் 'பச்சையம் என்பது பச்சை ரத்தம்' #சூழலியல் #ஹைக்கூ  நூலில் இருந்து... 

*

 #WorldSoilDay 

*

பிருந்தா சாரதி


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி