இன்னிக்கு சர்வதேச குரங்குகள் தினம்.

 


இன்னிக்கு சர்வதேச குரங்குகள் தினம்.

🐒
சிலபல முக்கியமான சம்பவங்கள், உறவுகள் அனைத்திற்கும் சர்வதேச நாள் கொண்டாடும். மனிதர்களின் மூத்தகுடிகளான குரங்குகளுக்கு ஏன் கொண்டாடக்கூடாது? இப்படி இரண்டு ப்ரண்ட்ஸ் பேசிக்கொண்டதன் விளைவுதான் இன்றைய தினம் சர்வதேச குரங்கு தினமாகக் கொண்டாடப் படுது.
ழாம்.. 2000-ம் வருஷம். கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும் மிச்சிகன் மாநில பல்கலைக்கழகத்தில் கலை மாணவர்களாக இருந்தனர். எது எதையோ பேசிக்கொண்டு இருந்த நண்பர்கள் பேசி சிரித்தபடி இருந்தனர். அப்போது இன்றைக்கு என்ன தினம் என எரிக் கேட்டதற்கு, இன்றைக்கு குரங்கு தினம் என நகைச்சுவையாகச் சொல்லியிருக்கிறார் சோரோ. `இதில் நகைச்சுவைக்கு என்ன இருக்கிறது இன்றைய தினத்தையே நாம் சர்வதேச குரங்கு தினமாகக் கொண்டாடுவோம். பிறகு, இந்த நாள் உண்மையிலேயே குரங்கு தினமாக மாறிவிடும்' என்றிருக்கிறார் எரிக்.
`இது நல்லாயிருக்கே... காசா பணமா... சும்மாக் கொண்டாடுவோம்' என்று முடிவு செய்த நண்பர்கள், தங்கள் பல்கலைக்கழக கலைப்பிரிவு மாணவர்களுடன் அந்தத் தினத்தை விடுமுறை தினமாகக் கொண்டாடினர். விடுமுறையைக் கொண்டாட ஒருநாள் கிடைத்தால் போதாதா? அடுத்தடுத்த ஆண்டுகளில் பல்வேறு கல்வி நிலையங்களிலும் வைரலானது குரங்கு தினக் கொண்டாட்டம். விடுமுறையோடு இதற்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்பாத கேசி சோரோ மற்றும் எரிக் மில்லியன் இருவரும் குரங்குகள் தொடர்பான காமிக்ஸ் மற்றும் கலைப்படைப்புகளை ஆன்லைனில் வெளியிட்டனர். அந்தக் கலைப்படைப்புகளை சர்வதேச அளவில் காட்சிப்படுத்தினார்கள். அதன் பிறகு `குரங்கு தினம்' புகழ் பெற்றது.
தற்போது அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், இங்கிலாந்து மற்றும் துருக்கி போன்ற நாடுகளில் சர்வதேச குரங்கு தினம் பரவலாகக் கொண்டாடப் படுகிறது. அமெரிக்காவின் `வாஷிங்டன் போஸ்ட்' பத்திரிகை, `இந்த அபிமான மற்றும் அதி புத்திசாலி விலங்கினத்தைப் பற்றி ஏதாவது கற்றுக் கொள்வதற்கு ஒரு நாள் அல்லது குரங்குபோல் செயல்பட இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்ளலாம்'எனக் குரங்குத் தினத்தை விவரிக்கிறது.
குரங்கு தினம் குறிப்பாகச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், காட்சி கலைஞர்கள் மற்றும் கலை நிறுவனங்களிடையே பிரபலமானது. ஜேன் குடால், கிரீன்பீஸ், நேஷனல் ஜியோகிராஃபிக், லண்டனில் உள்ள நேஷனல் போர்ட்ரெய்ட் கேலரி, லூவ்ரே மியூசியம், மெட்ரோபாலிட்டன் மியூசியம் ஆஃப் ஆர்ட் மற்றும் ஸ்மித்சோனியன் இன்ஸ்டிடியூட் ஆகியவை குரங்கு தினத்தின் ஆதரவாளர்கள்.
குரங்கு, மிகவும் புத்திசாலித்தனமான, வேகமான மற்றும் குறும்புத்தனமான விலங்கு. குரங்குகளின் செயல்பாடுகள் மற்றும் பழக்கவழக்கங்கள் பல நிலைகளில் மனிதர்களுடன் ஒத்துப் போகின்றன. மனிதர்களைப் போல `மிமிக்ரி' செய்யும் திறமை குரங்குகளுக்கு உண்டு. குரங்குகள் முதன் முதலில் தோன்றிய சரியான காலத்தைக் குறிப்பிடுவது கடினம். ஆனால் அவற்றின் தோற்றம் சுமார் 60 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
குரங்குகள் அண்டம் முழுவதும் வாழ்கின்றன. உலகில் 260-க்கும் மேற்பட்ட வகையான குரங்குகள் உள்ளன. அவை, புதிய உலகம் மற்றும் பழைய உலகம் என இரண்டு விதமாகப் பிரிக்கப்பட்டுள்ளன. புதிய உலக குரங்குகள் அமெரிக்காவில் வாழ்கின்றன. பழைய உலக குரங்குகள் ஆசியா மற்றும் ஆப்பிரிக்காவில் வாழ்கின்றன. மனிதர்களைப் போலவே குரங்குகளும் வடிவத்திலும் அளவிலும் மாறுபட்டவை.
எனவே இந்தச் சிறப்பு தினத்தன்று நமது முன்னோர்களான குரங்குகளை நேசிப்போம். கோவில்களில் நம் உடமைகளை பிடுங்கினாலும், நாம் அதிலிருந்துதான் வந்தோம் என்பதை நினைத்து மறப்போம்...மன்னிப்போம். குரங்கிலிருந்து தான் மனிதன் உருவானான் என்ற அடிப்படையில் பார்த்தால் குரங்கு தினம் என்பது மனிதர்களுக்கான தினமாகிறது.
எனவே, 'ஹாப்பி' குரங்கு தினம் ப்ரண்ட்ஸ்!

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,