டைட்டானிக்' திரைப்படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் நிறைவு🔥
'டைட்டானிக்' திரைப்படம் ரிலீஸாகி 25 ஆண்டுகள் நிறைவு🛳️
1997 டிசம்பர் இதே நாள் டைட்டானிக் படம் ரிலீஸ் ஆகி பில்லியன் டாலர் கணக்குல வசூல் குவிச்சுது. அந்த டைட்டானிக் படத்தை பத்தி பார்க்குறதுக்கு முன்னால, ஒரிஜினல் டைட்டானிக் கப்பல் பத்தி ஒரு குட்டி ரீவைண்ட்.
1912 ஆம் ஆண்டு அயர்லாந்துல உருவாக்கப்பட்ட பிரமாண்ட கப்பலான டைட்டானிக் ‘மூழ்கவே மூழ்காத கப்பல்’ அப்படினு விளம்பரம் செய்யப்படுது. தன்னோட முதல் பயணத்தை 2,200 பயணிகளோட இங்கிலாந்துல சௌதாம்ப்டன் நகரத்துல இருந்து நியூயார்க் நோக்கி தொடங்குது. இதுல கோடீஸ்வரர்கள்ல தொடங்கி சாதாரண ஆட்கள் வரை எல்லாரும் வர்றாங்க. ஏப்ரல் 10 ஆம் தேதி பயணத்தைத் தொடங்கிய இந்தக் கப்பல் ஏப்ரல் 14 ஆம் தேதி இரவு 12:40-க்கு ஒரு பெரிய பனிப்பாறைல மோதுது. கொஞ்சம் கொஞ்சமா மூழ்கின கப்பல்ல இருந்து சிலர் தப்பிக்க முயற்சி செய்றாங்க. அடுத்த 2 மணி நேரம் 40 நிமிடத்துல கப்பல் மொத்தமா தண்ணில மூழ்குது. மொத்தம் 2,200 பேர்ல 700 பேர் தப்பிச்சுடுறாங்க. 1,500 பேர் இறந்துபோறாங்க. இந்த சம்பவம் நடந்து 110 வருடம் ஆகுது. இந்த கப்பல்ல பயணிச்ச யாருமே இப்போ உயிரோட இல்ல.
அப்படி வட அட்லாண்டிக் கடல்ல மூழ்கின அந்தக் கப்பலை கடலுக்கு அடில தேடுற முயற்சி தொடர்ந்து நடந்திட்டு இருந்துச்சு. 12 ஆயிரம் அடிக்கு கீழ மறைஞ்சிருந்த அந்தக் கப்பலை 73 வருடம் கழிச்சு நேஷனல் ஜியாகிராஃபி டீம் 1985 செப்டம்பர் 1ஆம் தேதி கண்டுபிடிக்குறாங்க. இந்த விஷயம் பலருக்கும் ஆச்சர்யத்தைத் தருது. அதுல ஒருத்தர்தான் ஜேம்ஸ் கேமரூன். இந்த டைட்டானிக் திரும்பவும் கண்டுபிடிக்கப்பட்ட உடனே அவருக்கு இதை வச்சு ஒரு படம் பண்ணலாம்ங்குற ஐடியா வருது. ஒரு ஒன்லைன் எழுதுறாரு. அவரு எழுதுன ஒன்லைன் என்னன்னா.. ‘கடலுக்கு அடில புதைஞ்சிருக்குற டைட்டானிக்கை காட்டுறோம். அப்படியே இதுல உயிர் பிழைச்ச ஒரு சர்வைவரை காட்டுறோம். அப்படியே அவர் கதை சொல்ல ஆரம்பிக்குறாரு. கப்பல் மூழ்கின அந்த இரவுல என்னெல்லாம் நடந்ததுனு ரிகிரீயேட் பண்றோம். இந்தக் கதைல நிறைய மனிதர்களோட எமோஷனைச் சொல்றோம்’ இப்படி எழுதுறாரு.
வெறும் கதையை மட்டும் படிச்சா பத்தாதுனு தானே கடலுக்கு அடில போய் அந்தக் கப்பலை நேர்ல பார்க்கணும்னு முடிவு பண்றாரு. அதி நவீன கேமராக்களோட 12 ஆயிரம் அடி டீப் டைவ் பண்ணி டைட்டானிக்கை நேர்ல பார்க்குறாரு படம் பிடிக்குறாரு. திரும்பவும் கடலுக்கு மேல வந்த அவருக்கு கண்ணுல இருந்து தாரை தாரையா கண்ணீர் வருது. 12 முறை டீப் டைவ் பண்ணி எடுத்திருக்காங்க. ஒவ்வொரு முறையும் 11 மணி நேரம் ஆகுமாம் டைட்டானிக்கை பாக்க.
பிரம்மாண்டமான பொருட்செலவுல டைட்டானிக் படம் உருவாகுது. ஒரிஜினல் டைட்டானிக் கப்பலை கட்டுறதுக்கு 500 கோடி ரூபாய் கிட்ட செலவானது. ஆனா இந்தப் படம் 740 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டது. 20ஆம் நூற்றாண்டுல மிக அதிக பொருட்செலவுல எடுக்கப்பட்ட படம் இதுதான். இவ்வளவு பிரமாண்டமான ஒரு கதையை லவ் ஸ்டோரியா மாத்துனாரு ஜேம்ஸ் கேமரூன். ஜாக் கேரக்டர்ல லியானர்டோ டிகாப்ரியோவும், ரோஸ் கேரக்டர்ல கேத் வின்ஸ்லெட்டும் நடிச்சாங்க. ஒரிஜினலா அந்தக் கப்பல்ல போனவங்களோட லிஸ்டை எடுத்துக்கிட்டு அதுக்கேத்த மாதிரிதான் ஜூனியர் ஆர்டிஸ்டும் செலக்ட் பண்ணிருக்காங்க. அந்த படத்துல ஒரு 150 ஜூனியர் ஆர்டிஸ்ட் நடிச்சிருந்தா ஒவ்வொருத்தருக்கும் ஒரு பெயர் அவங்க யாரு எதுக்கு இந்தக் கப்பல்ல போறாங்கனு ஒரு பேக் ஸ்டோரியும் சொல்லிக்கொடுத்திருக்காரு கேமரூன். ஒரிஜினல் டைட்டானிக்ல பயணிச்சவங்க.. அந்த கப்பலை செஞ்சவங்கனு நிறைய பேர் இந்த படத்துல நடிச்சாங்க.
நம்ம ஊரு தியேட்டர்கள்ல டைட்டானிக் படம் பார்த்த எல்லாரும் ரகசியமா ரசிச்ச சீன் அந்த ஜாக் ரோஸை ஓவியமா வரையுற சீன். உண்மைல அந்த ஓவியத்தை வரைஞ்சது ஜேம்ஸ் கேமரூன்தான். இதுல ஒரு சுவாரஸ்யம் என்னென்னா, ஜேம்ஸ் கேமரூன் இடது கை பழக்கம் உள்ளவர். படத்துல ஜாக் வலது கைக்காரர்னு அதை ரிவர்ஸ் பண்ணி யூஸ் பண்ணிருக்காங்க. இன்னொரு சம்பவம்… கேத் வின்ஸ்லெட்டுக்கும் டிகாப்ரியோவுக்கும் ஒரு முத்தக்காட்சி படத்துல இருக்கும். அந்த சீனுக்கு கேத் சில கண்டிசன் போட்டாங்களாம்.. ஷூட்டுக்கு முன்னாடி சிகரெட், காபி, வெங்காயம், பூண்டு எதுவும் சாப்பிடக்கூடாதுனு சொல்லியிருக்காங்க. ஆனா சேட்டைக்காரரான லியோ இதெல்லாம் பண்ணிட்டுதான் முத்தம் கொடுத்தாராம்.
மெக்சிகோல அட்லாண்டிக் கடலுக்கு பக்கத்துல ஒரு பிரம்மாண்டமான தண்ணி தொட்டி கட்டி அதுலதான் இந்த கப்பலோட செட்டை வடிவமைச்சிருக்காங்க. கிட்டத்தட்ட ரியல் கப்பலோட அதே சைஸ்ல அதே மாதிரி ரெடி பண்ணிருக்காங்க. ஆனா இந்த செட்டை மூணா பிரிக்குற மாதிரியும் அதை கப்பல் மூழ்கும்போது எப்படி சாயுமோ அப்படி திருப்புற மாதிரியும் பண்ணிருக்காங்க. ஒரிஜினல் கப்பல் 12 ஆயிரம் அடி ஆழத்துல கிடந்ததுனு சொன்னோம்ல இந்த செட்ல வெறும் மூணு அடி உயரத்துக்குதான் தண்ணீர் இருக்கும். ஆனா மொத்த கப்பலும் அதுல மூழ்குற மாதிரி காமிக்க நிறைய மெனக்கெட்டு இருக்காங்க. நிறைய இடங்கள்ல கப்பலோட மினியேச்சர் பயன்படுத்திருக்காங்க. கப்பல் சாயும்போது மக்கள்லாம் சறுக்கி விழுவாங்கல்ல அப்போ அடிபடக்கூடாதுனு கப்பலோட நிறைய பொருட்களை ரப்பர்ல செஞ்சிருக்காங்க. மொத்தம் 160 நாள் இந்த ஷூட் நடந்திருக்கு. தண்ணிலயே ரொம்ப நாள் ஷூட்டிங் நடந்ததால படத்தோட ஹீரோயின் உள்ளிட்ட நிறைய பேருக்கு காய்ச்சல், ஜலதோசம்னு வந்திருக்கு. இந்த சீனை டிரெய்லர்ல வச்சதுதான் நிறைய பேரை படத்துக்கு இழுத்து வந்ததுனு சொல்றாரு ஜேம்ஸ் கேமரூன்.
1997 டிசம்பரில் படம் ரிலீஸ் ஆகி பில்லியன் டாலர் கணக்குல வசூல் குவிச்சது. அதுமட்டுமல்லாமல் 14 கேட்டகிரியில் ஆஸ்கரில் நாமினேட் ஆன டைட்டானிக் 11 விருதுகளை தட்டிச் சென்றது.
பின்னாளில் இந்த படத்துல நிறைய தப்பு இருக்குனு விமர்சனங்களும் வந்தது. குறிப்பா இந்தக் கப்பல் இரண்டா உடைஞ்சு மூழ்கினதை படத்துல பாத்தோம். உண்மைல இந்தக் கப்பல் மூணு பாகமா உடைஞ்சதா 2016-ல கண்டுபிடிச்சாங்க. இந்தப் படம் வந்து 20 வருசம் கழிச்சு படத்தோட க்ளைமேக்ஸ் பத்தி ஒரு சர்ச்சை வந்தது. ரோஸ் இருந்த அந்த கதவுல ரெண்டு பேர் தாராளாமா ஏறி தப்பிக்க முடியும். ஆனாலும் ஏன் ஜாக் ஏறலைனு சோசியல் மீடியால கிளப்பி விட்டாங்க நெட்டிசன்ஸ். இந்தக் கேள்விக்கு டைரக்டர் கேமரூன் ஒரு பதில் சொன்னாரு. ‘இடமிருக்கு, இல்லை அதை விடுங்க. என் கதைப்படி ஜாக் செத்துதான் ஆகணும். அப்போதான் இந்தக் கதை முழுமையடையும்’னு சொன்னாரு.
ஆக இப்ப நீங்க முதன்முதல்ல டைட்டானிக் படம் பார்த்த ஃபீலிங் வந்துருக்குமே!

 From The Desk of கட்டிங் கண்ணையா!

Comments

Popular posts from this blog

:இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் கோளாறுகள்? வாழ்வியல் முறையை மாற்றுங்கள்!

அரசு யோகா மற்றும் இயற்கை மருத்துவ கல்லூரி