குற்றாலம் அருவியில் குழந்தையை காப்பாற்றிய விளாத்திகுளம் இளைஞரை அழைத்து பாராட்டியமாவட்ட காவல் கண்காணிப்பாளர்

 *தூத்துக்குடி மாவட்டம்: 02.01.2023*



*குற்றால அருவியில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்ட 4 வயது சிறுமியை தனது உயிரை பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தை சேர்ந்த இளைஞருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் பொன்னாடை போர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டு.*

 

கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் என்பவர் கடந்த 29.12.2022 அன்று தனது குடும்பத்தினருடன் தென்காசி மாவட்டம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது அவரது மகளான 4 வயது சிறுமி தடாகத்தில் உள்ள துவாரத்தின் வழியாக தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டு, சுமார் 40 அடி ஆழ பள்ளத்தில் விழுந்தாள். அப்போது இதனைப் பார்த்த தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் வேம்பார் ரோடு பகுதியை சேர்ந்த வாடகை கார் ஓட்டுநரான செல்வராஜ் மகன் விஜயகுமார் (24) என்பவர் விரைந்து சென்று, பள்ளத்தில் இறங்கி சிறுமியை பத்திரமாக மீட்டார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவின.


அருவி தடாகத்தில் குளித்த சிறுமி தண்ணீரில் இழுத்து செல்லப்பட்டபோது தனது உயிரையும் பொருட்படுத்தாமல் விரைந்து சென்று காப்பாற்றிய இளைஞர் விஜயகுமாரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எல். பாலாஜி சரவணன் அவர்கள் இன்று (02.01.2023) மாவட்ட காவல்துறை அலுகவலத்திற்கு நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி வெகுமதி வழங்கி பாராட்டினார்.

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி