*அஷ்டலிங்கம் தரும் அதிர்ஷ்டம்*

  *அஷ்டலிங்கம் தரும் அதிர்ஷ்டம்*

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் எட்டுத் திக்கிலும் உள்ள அஷ்டலிங்கங்கள், இந்திர லிங்கம், அக்னி லிங்கம், யம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் ஆகியவை ஆகும். இந்த மலையின் சுற்றளவு சுமார் பதினான்கு கிலோமீட்டர். இந்த கிரிவலப் பாதையிலுள்ள அஷ்டலிங்கங்களை வழிபடுவதால் கிடைக்கும் பலன்கள் எண்ணற்றவை என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்கள் பக்தர்கள். 


இந்திர லிங்கத்தை வழிபடுவதால் நீண்ட ஆயுளுடன் புகழும் கிடைக்கும்.


 அக்னி லிங்கம் நோய்கள் மற்றும் பயம் நீக்கும். யம லிங்கம் நீண்ட ஆயுள் தரும், 


நிருதி லிங்கம் உடல் நலம், செல்வம், மழலைச் செல்வம், புகழ் போன்றவற்றை அருளும். 


வருண லிங்கம் நீர் சம்பந்தப்பட்ட நோயைத் தீர்க்கும்.


 வாயு லிங்கம் இதயம், மூச்சு தொடர்பான நோயைப் போக்கும். 


குபேர லிங்கம் செல்வமும் உன்னத வாழ்க்கையும் தரும்.


 ஈசான்ய லிங்கம் மன அமைதி தரும்.

 *ஏழரைச் சனியும் திருமணமும்.... பரிகாரமும்*


ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது.

30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள்.

ஏழரை சனிக்கும் மனித வாழ்விற்கும் நெருங்கிய சம்பந்தம் உண்டு. சனி பகவான் கொடுப்பதை தடை செய்யும் அதிகாரம் வேறு எந்த கிரகத்திற்கும் கிடையாது. பலருக்கு திருமணம், குழந்தை பாக்கியம், வீடு, வாகனம் போன்ற பல்வேறு சுப விஷயங்கள் நடைபெறுவது ஏழரைச் சனியின் காலத்தில் தான் என்பது மறுக்க முடியாத உண்மை. பல வருடங்களாக தடைபடும் திருமணம், குழந்தை பாக்கியம் போன்ற பல்வேறு சுப நிகழ்வுகள் இந்த காலகட்டத்தில் எளிமையாக நடந்து விடும்.


ஏழரை சனியின் காலத்தில் தான் ஆணிற்கு குடும்பம் என்றால் என்ன? மனைவி குழந்தைகளுக்கு ஒரு மனிதன் நிறைவேற்ற வேண்டிய கடமைகள் என்ன? உழைப்பின் அவசியம், உழைப்பால் உயரும் நெறி முறை போன்ற பல்வேறு வாழ்க்கை தத்துவத்தை புரிய வைப்பார்? பெண்களுக்கு கணவர், புகந்த வீட்டாருடன் எப்படி அனுசரித்து வாழ்வது? கணவனின் பொருளாதாரத்தில் எப்படி குடும்பம் நடத்த வேண்டும், குழந்தைகளை எப்படி பராமரிக்க வேண்டும் போன்ற பல்வேறு இல்வாழ்க்கை உண்மைகளை புரிய வைப்பார்.


சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் தசா புக்தி சாதகமாக இருந்தால் ஏழரைச் சனி காலத்தில் நடைபெறும் திருமணம், மண வாழ்க்கை பாதிக்காது. தங்களது எதிர்பார்ப்பிற்கு ஏற்ற வரன் அமையாத காரணத்தால் ஏழரை சனியின் மேல் பழிபோடுகிறார்கள். அல்லது சுயவிருப்பு வெறுப்பு காரணமாக ஏழரை சனி வந்தால் திருமணம் செய்யக் கூடாது என 30 வயதிற்கு மேல் ஆகியும் திருமணத்தை தள்ளி போடுகிறார்கள். பல வருடங்களாக திருமணமே வேண்டாம் என்று கூறுபவர்களுக்கு கூட ஏழரை சனியின் காலத்தில் திருமணம் தானாக நடந்து விடும்.


அஷ்டமச் சனியும் திருமணமும்


ராசிக்கு எட்டாம் இடத்தில் நிற்கும் சனியின் ஏழாம் பார்வை இரண்டாமிடமான தனம்,வாக்கு, குடும்பஸ்தானத்திற்கு இருப்பதால் வாய் கொடுத்து மாட்டிக் கொள்பவரைப் போல தேவையற்ற வம்புக்கு சென்று தானே அதில் மாட்டிக் கொள்வர். அதாவது வம்பு, வழக்கு, தகராறில் ஈடுபடுதல், பிறர் விஷயங்களில் கலகம் செய்ய நினைத்தல் போன்ற செயல்களில் ஈடுபடுவதால், தனக்கு ஏற்பட வேண்டிய இன்பமான நிலையை தானே கெடுத்துக் கொள்ளக்கூடிய வாய்ப்பை உருவாக்கிக் கொள்வார்கள்.மேலும் ஜனன கால ஜாதக ரீதியாக சாதகமற்ற தசை புத்தி நடப்பவர்களுக்கு தொழில், உத்தியோகத்தில் எதிர்பாராத இடர்களை சந்திக்க நேரும் என்பதால் திருமணத்தை தவிர்ப்பது நல்லது.


பரிகாரம்


எனவே ஏழரை சனியின் காலத்தில் முயற்சித்தால் திருமணத் தடை அகலும். விரும்பிய வரன் கைகூடி வரும்.ஏழரைச் சனியால் திருமணம் தடைபடுவதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. ஜனன கால ஜாதக ரீதியான சனி பகவானால் திருமணத் தடை இருப்பவர்கள், சரியான திருமண வாழ்வு அமையாமல் மன நிம்மதி இழந்து அல்லாடுபவர்கள் சனிக்கிழமை திருவண்ணாமலை சென்று அண்ணாமலையாரை வழிபட திருமணத் தடை அகலும். திருமணத்திற்குப் பிறகு இல்லறம் நல்லறமாகும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,