தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று

தேசிய பெண்கள் குழந்தைகள் தினமின்று❣️சமூகத்தில் பெண் குழந்தைகளுக்கு சம உரிமை, சம வாய்ப்பு அளிப்பதை உறுதி செய்யும் பொருட்டு, 2008-ம் ஆண்டு ஜனவரி மாதம் 24-ந் தேதி முதல் ‘தேசிய பெண் குழந்தைகள் தினம்’ கொண்டாடப்படுது. 


பெண் குழந்தைகள்... பூக்குட்டிகள்.. வாழ்வில் நாம் காணும் உயிரோவியங்கள்... வீட்டுக்குள் வளைய வரும் பெண்தெய்வம்... அவள் இருந்தாலே வீடு நிறைவு பெறும்..

இப்படி பெண் குழந்தைகளின் முக்கியத்துவத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் கொண்டாடப்படும் இந்நாள், பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தால் கொண்டுவரப்பட்டு, இந்தியா முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டு வருது. 


பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு நேரும் பிரச்சினைகளைத் தடுப்பது, பெண் குழந்தைகளுக்கான கல்வியை உறுதி செய்வது ஆகியவை இந்நாளின் நோக்கமாகும். தற்போதையச் சூழலில் பெண் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்படுகின்றனவா என்பது சந்தேகமே. 

அனைவரும் முதலில் குடும்பத்தில் தங்கள் பெண் குழந்தைகளை மதிப்பான முறையில் நடத்த ஆரம்பிக்க வேண்டும். இதுவே, சமூகத்திலும் மாற்றத்தை உண்டாக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,