திருப்பதி கோவிலில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1441.34 கோடி*

 திருப்பதி கோவிலில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருமானம் ரூ.1441.34 கோடி*



திருமலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-திருமலை-திருப்பதி தேவஸ்தானத்தின் எதிர்பார்ப்புகளை தாண்டி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானம் அதிகமாக கிடைத்துள்ளது தேவஸ்தான வரலாற்றில் சாதனையாகும். 2022-ம் ஆண்டு திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உண்டியல் வருமானமாக ரூ1,441.34 கோடி கிடைத்துள்ளது.கொரோனா தொற்று பரவலால் 2 ஆண்டுகளாக கோவிலில் சாமி தரிசனம் செய்யாமல் இருந்த பக்தர்கள் காணிக்கையாக செலுத்திய உண்டியல் வருமானம் ஆகும். தேவஸ்தானம் வெளியிட்ட ஆண்டு பட்ஜெட்டில் 2022-ம் ஆண்டு உண்டியல் வருவாய் ஆயிரம் கோடி ரூபாய் வசூலாகும், எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால், ஆயிரம் கோடி ரூபாயை தாண்டி உண்டியல் வருமானம் கிடைத்திருப்பது சாதனையாகும்.2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் 9 லட்சத்து 96 ஆயிரத்து 93 பக்தர்களும், பிப்ரவரியில் 10 லட்சத்து 95 ஆயிரத்து 724 பக்தர்களும், மார்ச் மாதம் 19 லட்சத்து 72 ஆயிரத்து 741 பக்தர்களும், ஏப்ரல் மாதம் 20 லட்சத்து 64 ஆயிரத்து 915 பக்தர்களும், மே மாதம் 22 லட்சத்து 61 ஆயிரத்து 641 பக்தர்களும், ஜூன் மாதம் 23 லட்சத்து 23 ஆயிரத்து 421 பக்தர்களும், ஜூலை மாதம் 23 லட்சத்து 40 ஆயிரத்து 319 பக்தர்களும், ஆகஸ்டு மாதம் 22 லட்சத்து 22 ஆயிரத்து 184 பக்தர்களும், செப்டம்பர் மாதம் 21 லட்சத்து 12 ஆயிரத்து 254 பக்தர்களும், அக்டோபர் மாதம் 22 லட்சத்து 74 ஆயிரத்து 265 பக்தர்களும் நவம்பர் மாதம் 20 லட்சத்து 77 ஆயிரத்து 816 பக்தர்களும், டிசம்பர் மாதம் 18 லட்சத்து 84 ஆயிரத்து 108 பக்தர்களும் (29-ந்தேதி வரை) என மொத்தம் 2 கோடியே 54 லட்சம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 11 கோடியே 42 லட்சம் லட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தலைமுடி காணிக்கை செலுத்திய பக்தர்களின் எண்ணிக்கை 1.08 கோடியாகும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,