30 நாள் வரவேண்டிய கேஸ், நிச்சயம் 60 நாளைக்கு வரும்.

 30 நாள் வரவேண்டிய கேஸ், நிச்சயம் 60 நாளைக்கு வரும்.அதிகமாக விலை கொடுத்து வாங்கும் கேஸ் சிலிண்டர், 30 நாளைக்கு வரக்கூடிய கேஸ் சிலிண்டர் 25 நாளைக்குள்ளாகவே தீரும்

. இப்படி கேஸ் சிலிர்களின் பயன்பாடு நம் வீட்டில் அதிகமாக ஆவதற்கு நாம் செய்யக்கூடிய சின்ன சின்ன தவறுகள் கூட காரணமாக இருக்கலாம். அன்றாடம் நாம் சமையலில் செய்யக்கூடிய அந்த சின்ன சின்ன தவறுகள் என்னென்ன, அதையெல்லாம் சுலபமாக எப்படி சரி செய்வது என்பதை பற்றிய பயனுள்ள வீட்டு குறிப்புகளை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

இன்று பாலில் இருந்து காய்கறி, இறைச்சி, வரை ஃப்ரிட்ஜில் வைத்து தான் சமைக்க வேண்டிய சூழ்நிலை. அப்படி இருக்கும் போது ரொம்பவும் குளிர்ச்சியான இந்த பொருட்களை அப்படியே எடுத்து போட்டு, அடுப்பில் வைத்து சமைப்பதன் மூலம், இது சூடி ஏறி வெந்து வதங்கி சமைத்து வருவதற்குள் தினம் தினம் கூடுதலாக 1/2 மணி நேரம் கேஸ் நமக்கு தேவைப்படும். (குறிப்பா இப்ப வரக்கூடிய தக்காளி எல்லாம், வதங்கவே மாட்டேங்குது என்பது இல்லத்தரசிகளின் கம்ப்ளைன்ட். தக்காளி நல்லாதான் இருக்குது. பிரிட்ஜில் வைத்து வைத்து மறுத்து போய் இருக்கு. அதனால தான் வதங்க லேட் ஆகுது.) ஆகவே ஃப்ரிட்ஜில் வைத்த உணவுப் பொருட்களை அப்படியே எடுத்து பயன்படுத்தக் கூடாது.

குறிப்பு 1: வெதுவெதுப்பான தண்ணீரில் 1 ஸ்பூன் கல் உப்பு போட்டு கரைத்து, அந்த தண்ணீரில் பால் பாக்கெட் போட்டால், ஐந்தே நிமிடத்தில் பால் பாக்கெட்டில் இருக்கும் குளிர்ச்சி அனைத்தும் தானாக இறங்கிவிடும். பிறகு அந்த பால் பாக்கெட்டை ஒரு முறை கழுவி விட்டு, காய்ச்சும் போது சீக்கிரமாக சூடாகி பொங்கி கிடைக்கும்.

 குறிப்பு 2: ஒரு அகலமான பவுலில் வெதுவெதுப்பான தண்ணீரில், ஒரு ஸ்பூன் கல் உப்பு போட்டு, அதில் பிரிட்ஜில் வைத்து எடுத்த, நீங்கள் சமைக்க வேண்டிய காய்கறிகளை ஒரு பத்து நிமிடம் போட்டு வையுங்கள். அதன் பிறகு எடுத்து வெட்டி சமைக்கும் போது காய்கறிகள் சீக்கிரமே வெந்துவிடும்.

குறிப்பு 3: பால் காய்கறி என்று மட்டும் கிடையாது. பன்னீர், மஸ்ரூம் தோசை மாவு, இட்லி மாவு என்று இப்படி எதை ஃப்ரிட்ஜில் வைத்திருந்தாலும் அதை சமைப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே எடுத்து வெளியில் வைத்து விட்டு தான் சமைக்க வேண்டும். மீதமான குழம்பு கூட ஜில்லுனு எடுத்து அடுப்பில் வைத்து சூடு செய்யக்கூடாது. இல்லை என்றால் கேஸ் தினம் தினம் வீணாகத்தான் செய்யும். 

குறிப்பு 4: மீன், சிக்கன், மட்டன் இப்படிப்பட்ட இறைச்சிகளை மசாலா தடவி நிறைய பேர் முந்தைய நாளில் ஃப்ரீசரில் வைத்து விடுவார்கள். மறுநாள் காலை ப்ரீசரில் இருந்து அதை எடுத்து குறைந்தது 2 மணி நேரத்திற்கு முன்பாக வெளியே வைக்க வேண்டும். அப்படி இருந்தும் அதில் இருக்கும் குளிர்ச்சி நிலை சீக்கிரமாக குறையவே குறையாது. ஒரு பாத்திரத்தில் சூடான தண்ணீரில் 2 ஸ்பூன் உப்பு போட்டு, நன்றாக கரைத்து விடுங்கள். இந்த தண்ணீரில் கொஞ்சம் திக்கான டவலை நனைத்து கொள்ளுங்கள். வெதுவெதுப்பான உப்பு தண்ணீர் கலந்த டவல் இப்போது தயார். ஃப்ரீசரில் இறைச்சி போட்டு வைத்திருக்கும் டப்பாவை எடுத்து, இந்த டவலில் வைத்து சுருட்டி பத்து நிமிடங்கள் வைத்தால் போதும். உள்ளே இருக்கும் இறைச்சியில் குளிர்ச்சி தன்மை சீக்கிரம் குறைந்து விடும்

. குறிப்பு 5: சில பேர் வீடுகளில் கேஸ் பர்னர் மட்டும் எரியாது. கேஸ் பர்னருக்கு சுற்றிலும் கேஸ் லீக் ஆகி எரியும். இப்படி எரிவதன் மூலம் கேஸ் வீணாவது ஒரு பக்கம் இருக்க, இதன் மூலம் ஆபத்தும் இருக்கிறது. ஆகவே அப்படிப்பட்ட கேஸ் ஸ்டவ்வை உடனடியாக சர்வீஸ் செய்ய வேண்டும். இல்லை என்றால் உடனடியாக கேஸ் ஸ்டவ்வை மாற்றுவது நல்லது. சில பேர் வீடுகளில் அடுப்பை பற்ற வைத்து சமைக்க தொடங்கிய உடனே கேஸ் வாசம் லேசாக அடித்துக் கொண்டே இருக்கும். அப்போது உங்களுடைய கேஸ் ஸ்டவ்வில் ஏதோ ஒரு இடத்தில் கேஸ் லீக் ஆகிறது என்று அர்த்தம். 

அப்படி இருந்தால் உடனே ஒரு சர்வீஸ் சென்டருக்கு உங்களுடைய அடுப்பை எடுத்துச் சென்று அதை சரி பார்ப்பது நல்லது. சில பேர் வீட்டில் அந்த கேஸ் பைப்பில் கூட டேமேஜ் இருக்கும். அதனால் கூட கேஸ் லீக் ஆவதற்கு வாய்ப்பு உள்ளது.


பர்னரில் நிறைய அடைப்பு இருந்தாலும் கேஸ் சரியாக எரியாது. மாதத்திற்கு ஒருமுறை பர்னரை தனியாக கழட்டி அந்த ஓட்டைகளுக்கு உள்ளே பின் ஊக்கை வைத்து குத்தி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும். இப்படி சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் எடுத்து சமைத்தால் உங்களுடைய கேஸ் வீணாகாமல் தவிர்க்கலாம்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சிங்கப்பெண்ணே மகளிர் தின கவிதை