பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் - உச்சநீதிமன்றம் தீா்ப்பு...*
*💫-பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் - உச்சநீதிமன்றம் தீா்ப்பு...*


*💫-மத்திய அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு அளித்துள்ளது...*


*💫-நாட்டில் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மத்திய அரசு கடந்த 2016-ஆம் ஆண்டு நவம்பா் 8-ஆம் தேதி மேற்கொண்டது. அதன்படி, அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செல்லாததாக அறிவிக்கப்பட்டன...*


*💫-நாட்டில் கருப்புப் பணத்தை ஒழிக்கவும், பயங்கரவாத இயக்கங்களுக்கு நிதி கிடைப்பதைத் தடுக்கவும், இணையவழி பணப் பரிவா்த்தனைகளை ஊக்குவிக்கவும் இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக மத்திய அரசு தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது...*


*💫-எனினும், பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் நாட்டில் பலா் பாதிக்கப்பட்டதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் 58 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன...*


*💫-அந்த மனுக்களை நீதிபதிகள் எஸ்.அப்துல் நஸீா், பி.ஆா்.கவாய், பி.வி.நாகரத்னா, ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்பிரமணியன் ஆகியோரைக் கொண்ட அரசியல்சாசன அமா்வு விசாரித்தது...*


*💫-அனைத்து தரப்பு விசாரணையும் நிறைவடைந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கிய உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு, பணமதிப்பிழப்புக்கு எதிரான அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்வதாக தெரிவித்தனர்...*


*💫-இந்த வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், ரிசர்வ் வங்கியுடன் கலந்து ஆலோசித்த பிறகே பணமதிப்பிழப்பை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது...*


*💫-மத்திய அரசின் பொருளாதார கொள்கை முடிவை திரும்பப் பெற உத்தரவிட முடியாது எனத் தெரிவித்தனர்...*


*💫-மேலும், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வில், 4 நீதிபதிகள் பணமதிப்பிழப்பிற்கு ஆதரவாகவும், நீதிபதி பி.வி.நாகரத்னா பணமதிப்பிழப்பிற்கு எதிராகவும் தீர்ப்பு வழங்கியுள்ளனர்...*


*💫-முன்னதாக, பணமதிப்பிழப்பு நடவடிக்கையை இந்திய ரிசா்வ் வங்கியின் (ஆா்பிஐ) பரிந்துரை அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ள வேண்டும்...*


*💫-என வாதிட்ட மனுதாரா் தரப்பு மூத்த வழக்குரைஞா் ப.சிதம்பரம், இந்த விவகாரத்தில் மத்திய அரசு தன்னிச்சையாக முடிவெடுத்துள்ளதாகக் குற்றஞ்சாட்டினாா்...*


*💫-ஆா்பிஐ தரப்பில், வரி ஏய்ப்பைத் தடுப்பது உள்ளிட்ட பலகட்ட நன்மைகளைக் கருத்தில்கொண்டு, விரிவான ஆலோசனைக்குப் பிறகே பணமதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் அதை ரத்து செய்யக் கூடாது என்றும் மத்திய அரசு தரப்பில் வாதிடப்பட்டது...*


*💫-அந்நடவடிக்கையால் ஆரம்பகட்டத்தில் சிலருக்கு பாதிப்பு ஏற்பட்டதாகவும் நாளடைவில் அவை சரிசெய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது...*


●▬▬▬▬💫۩۞۩💫▬▬▬▬●
 

*

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,