டிசம்பர் மாத யுபிஐ பரிவா்த்தனை 782 கோடி.

 புதிய வரலாறு: 

டிசம்பர் மாத யுபிஐ பரிவா்த்தனை 782 கோடி.



கடந்த டிசம்பா் மாதம் யுபிஐ பரிவா்த்தனைகளின் எண்ணிக்கை 782 கோடியாக அதிகரித்துள்ளது. இது அதற்கு முந்தைய நவம்பர் மாதத்தைவிட 7 சதவீதம் அதிகம் ஆகும்.


2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யுபிஐ பரிவர்த்தனை மூலம் மேற்கொள்ளப்பட்ட தொகை ரூ.12.8 லட்சம் கோடியாக உள்ளது.


  இது கடந்த மாதத்தைக் காட்டிலும் 8 சதவீதம் அதிகமாகும்.

இந்திய தேசிய பேமண்ட்ஸ் காா்ப்பரேஷன் தரவுகளின்படி, கடந்த அக்டோபர் மாதத்தில் ரூ.12.11 லட்சம் கோடி மதிப்பிலான 730 கோடி யுபிஐ பரிவா்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன. யுபிஐ பரிவர்த்தனை 700 கோடியை தாண்டியது அக்டோபர் மாதத்தில்தான் முதல் முறை.


ஒட்டுமொத்தமாக, 2022ஆம் ஆண்டு யுபிஐ மூலம் மேற்கொள்ளப்பட்ட பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 7,404 கோடியாகவும், பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை ரூ.125 லட்சம் கோடியாகவும் உள்ளது.


இதன்படி, கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் 2022ஆம் ஆண்டு பரிவர்த்தனை எண்ணிக்கை 90 சதவீதமும், பரிவர்த்தனை தொகை 76 சதவீதமும் அதிகரித்துள்ளது.



2021ஆம் ஆண்டு மொத்த பரிவர்த்தனை 3,800 கோடியாகவும், பரிவர்த்தனை தொகை ரூ.72 லட்சம் கோடியாகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது. மாதந்தோறும் யுபிஐ பரிவர்த்தனைகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது...

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி