ஸ்டாலின் கொடுத்த "ரியாக்சன்

 

ஸ்டாலின் கொடுத்த "ரியாக்சன்


சட்டசபையில் ஆளுநர் பேசுவதுதான் உரை என்று சொல்வது தவறு. ஆளுநர் உரை என்பது அரசின் உரை. அரசு எழுதிக்கொடுப்பதைதான் ஆளுநர் படிக்க வேண்டும், என்று மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூபிற்கு அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாட்டில் ஆளுநர் ஆர். என் ரவி - முதல்வர் ஸ்டாலின் இடையிலான மோதல் உச்சம் பெற்றுள்ளது.ஆளுநர் ஆர். என் ரவியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக முன்பே குடியரசுத் தலைவரிடம் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. சமீபத்தில் தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் பேசிய உரைக்கு எதிராகவும் தமிழ்நாடு ஆளும் திமுக சார்பாக எம்பிக்கள் குடியரசுத் தலைவர் முர்முவிடம் புகார் அளிக்கப்பட்டது.

அதோடு சட்டசபையிலேயே அவரின் உரைக்கு எதிராக முதல்வர் ஸ்டாலின் மூலம் தீர்மானம் நிறைவேற்றி, அரசின் உரை அவை குறிப்பில் சேர்க்கப்பட்டது. இன்னொரு பக்கம் ஆளுநரின் செயல்பாடுகள் மீது ஆளும் திமுக கடுமையான விமர்சனங்களை வைத்து வருகிறது. ஆளுநர் ஆர். என் ரவி 20 மசோதாக்களை டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டு உள்ளார். முக்கியமாக பல்கலைக்கழகங்களில் முதல்வரை வேந்தராக நியமிக்கும் மசோதாவை ஆளுநர் ஆர். என் ரவி டெல்லிக்கு அனுப்பாமல் கிடப்பில் போட்டுள்ளார். சில மசோதாக்கள் 1 வருடமாக கிடப்பில் இருக்கின்றன. இதனால் ஆளுநருக்கும் - ஆளும் தரப்பிற்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டுள்ளது.
பேட்டி இந்த மோதல் தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் மணி ஒன்இந்தியா யூ டியூபிற்கு அளித்துள்ள பேட்டியில், சட்டசபையில் ஆளுநர் பேசுவதுதான் உரை என்று சொல்வது தவறு. ஆளுநர் உரை என்பது அரசின் உரை. அரசு எழுதிக்கொடுப்பதைதான் ஆளுநர் படிக்க வேண்டும். நான் பார்த்துக்கொண்டு இருக்கிறேன். செய்திக்காக அவரின் உரையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். இப்போது ஆளுநர் தனது உரையில் ஒரு பாராவை படிக்கவில்லை. அதோடு அவராக சில பாராக்களை சேர்த்து படிக்கிறார். இப்போது சபாநாயகர் மொழிபெயர்ப்பை படிக்கும் போது அரசின் உரையை அப்படியே படிக்கிறார். இப்போது செய்தி கொடுக்கும் நான் ஆளுநர் உரை என்று எதை ரிப்போர்ட் செய்வது? இதில் எதை ரிப்போர்ட் செய்வது என்பது சங்கடம். எழுதப்பட்ட ரிப்போர்ட்தான் இறுதியானது. அதைத்தான் ஆளுநர் வாசிக்க வேண்டும். அதனால்தான் முதல்வர் தீர்மானம் கொண்டு வந்தார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானம் என்பது கண்டனம் தெரிவிக்கும் தீர்மானம் இல்லை. குழப்பத்தை தீர்க்கும் தீர்மானம். இந்த உரையை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்த உரையை நான் வாசிக்கிறேன் என்று ஆளுநர் ஏற்றுக்கொண்டு உள்ளார். அதை ஏற்றுக்கொண்ட நிலையில் அவர் உரையை அப்படியே வாசித்து இருக்க வேண்டும். ஆனால் அதை ஆளுநர் மீறிவிட்டார்.

 5 பேர் கையெழுத்து போட்ட நிலையில், ஆளுநர் கடைசியில் கையெழுத்து போட்டு இருக்கிறார். நீங்கள் கையெழுத்து போட்டு இருக்கிறீர்கள். நீதிமன்றத்தைவிட மேலானது சட்டமன்றம். சட்டமன்றம் எழுதும் சட்டத்தைத்தான் நீதிமன்றம் பின்பற்றுகிறது. அங்கே போய் இப்படி மாற்றி பேசி விளையாடலாமா? அது என்ன விளையாட்டு கூடமா? எழுதப்பட்ட உரையில் என்ன இருக்கிறதோ அதுதான் ஆளுநர் உரை. அதைதாண்டி அவர் பேசிய எதுவும் பதிவாகாது. வருத்தத்துடன் இதை பதிவு செய்கிறேன் என்று ஆளுநர் உரை குறித்து தீர்மானம் கொண்டு வந்தார் முதல்வர்.
முதல்வர் இதை தவிர்த்து இருக்க முடியாது. ஏனென்றால் ஆளுநர் முதல் கல்லை வீசி விட்டார். அவர் ஆக்சனை செய்துவிட்டார். அதற்கு முதல்வர் ஸ்டாலின் ரியாக்சன் கொடுத்துள்ளார். சுதந்திர வரலாற்றில் பல அரிதினும் அரிதான சம்பவங்கள் நடந்துள்ளன. சபாநாயகரை தாக்கிய சம்பவங்கள் கூட நடந்துள்ளன. தமிழ்நாட்டில் கண்டன தீர்மானம் எல்லாம் கொண்டு வரப்படவில்லை. வருத்தம் தெரிவித்து விளக்க தீர்மானம்தான் கொண்டு வரப்பட்டு உள்ளது.
வரலாறு அரசு எழுதிய உரைதான் ரிப்போர்ட்டில் இருக்கும். அதுதான் இனி வரலாற்றில் இருக்கும். எதிர்காலத்தில் வருபவர்களுக்கு ஆளுநர் படித்தது தெரியாது. சில சாதி வெறியர்கள், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்று நினைத்துக்கொண்டு இருக்கும் சில ஜென்மங்கள் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அவர்கள்தான் அரசியலமைப்பு சட்டத்தில் சிக்கல் இருப்பதாக பேசிக்கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லாம் ஆட்சியை கலைக்க வேண்டும் என்று பேசிக்கொண்டு இருக்கிறார்கள். திமுக ஆட்சிக்கு வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாத, நவதுவாரத்திலும் எரிந்து கொண்டு இருக்கும் இவர்கள், அறிவுஜீவி என்ற பெயரில் உலா வந்து கொண்டு இருக்கும் ஈன பதர்களின் குரல்கள் இது.
இதை புறந்தள்ளலாம். தமிழ்நாடு மக்கள் இவர்களை புறக்கணிப்பார்கள். இதற்கு மேல் குறைந்தபட்ச தர்மம் கூட இல்லாத மனித உருவில் இருக்கும் அந்த ஜென்மங்கள் பற்றி நாம் நினைக்க கூடாது. கொள்கை ரீதியாக ஆயிரம் வேறுபாடு இருந்தால் கூட அவர்களை மதிக்கிறார்கள். ஆனால் கொஞ்சம் கூட தர்மம் இல்லாத, பொய் பேசுவதையே 24 மணி நேரமும் பிழைப்பாக கொண்டு இருக்கும் தங்களின் ஜாதிய வெறிர்கள், ஆடிட்டர் என்ற பெயரிலும், பத்திரிகையாளர்கள் என்ற பெயரிலும், அரசு விமர்சகர்கள் என்ற பெயரிலும் தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளாக உலா வந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களை மக்கள் மொத்தமாக புறக்கணிக்கப்பார்கள், என்று மூத்த பத்திரிகையாளர் மணி தெரிவித்துள்ளார். (மேற்குறிப்பிட்ட செய்தியில் இடம்பெற்று இருக்கும் வார்த்தைகள் பேட்டியில் மூத்த பத்திரிகையாளர் மணி குறிப்பிட்ட வார்த்தைகள் ஆகும்).




courtesy https://tamil.oneindia.com/news


Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,