மகிஷாசுரமர்த்தினி/கவிதை../- தஞ்சைதவசி

 




பொம்மை அரசர்கள் போதிசத்துவராக முடியாது

போகத்தின் தாளத்தில் பிசகிய விருவுப் பூனைகள்
பிணமாக இருந்த பிணம் நாறுகிறது கிழிசல்மனம்
தீர்த்துக்கட்டும் நடனம் மேய்ப்பர்கள் சுயவடிவம்
மாகாளி சிவப்பின்தீவிரம் பதறும் பூமியின் தாழ்ப்பாள்
களமாடும் திரிசூலி அரூபத்தில் மகிஷாசுரமர்த்தினி
அஞ்சுவதும் அடிபணிவதும் அடிமாட்டுத் தொழுவம்
போரில் காயங்கள் வலிப்பதில்லை அகாலம் விடியும்
கலாச்சாரத்தின் கட்டுக்கதை காமத்தின் நிறம் நீலம்
கட்டுமான வித்தகம் நிலையற்ற ஸ்திதி கழுகின்தடம்
புனைவில் நடமாடும் கடவுள்கள் போதும்பா நடிப்பு
அச்சத்துடன் நிகழ்காலம் விழித்திருக்கும் விளக்குகள்



- தஞ்சைதவசி -

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,