https://www.youtube.com/watch?reload=9&v=jf6BgG6aRUU&feature=youtu.be
சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,
சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது , எந்நாளும் தனது சொல்லாற்றலால் சுடர்விட்டு பிரகாசிக்கும் ஆற்றலை கவிதை வழி தந்தவரும், விவேகத்துடன் வேகம் கலந்து, அன்றும், இன்றும், என்றும் நம் தமிழ்த்திருநாட்டில் தனக்கென, தனி அடையாளத்தைக் கொண்டு புகழுடன், நம்மோடு வாழ்ந்து வருபவர் மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவர்கள். இன்று அவரை நினைவில் கொள்வோம். தேசத்துக்காக, தன் கவிதை வரிகளால், மக்களை விழிப்படையச் செய்த முண்டாசுக் கவிஞர் சுப்ரமணிய பாரதியார் அவர்கள். எட்டயபுரத்தில் 11.12.1882 ல் பிறந்த அறிவுச் சுடர், சமஸ்கிருதம், இந்தி. வங்காளம், ஆங்கிலம் போன்ற பல்வேறு மொழிகளை கற்றுத் தெளிந்தார். தமிழ்மொழியின், இலக்கண இலக்கியங்களை, முறைப்படி பயின்றதன் காரணமாக, 1904 ஆம் ஆண்டு, சுதேசமித்திரன் இதழின் உதவி ஆசிரியர் ஆனார். பின்னர் அரசியலில் தீவிரம் கொண்டபோது கப்பலோட்டிய தமிழன் வ. உ. சி. யுடன் தொடர்பு ஏற்பட்டது, கல்கத்தாவில் நடைபெற்ற, காங்கிரஸ் சார்பான கூட்டத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது சுவாமி விவேகானந்தரின் சிஷ்யை நிவேதிதாவை சந்தித்து அவரையே தன் ஞானகுருவாக ஏற்றுக் கொண்டார்.1907 ஆம்
Comments