நீங்கள் உங்களது மொபைல் போனிலிருந்தே எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்டறிய முடியும்.
அடி தூள்..! இனி ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..!
ஒரே வாட்ஸ் அப்பை இரண்டு டிவைஸ்களில் பயன்படுத்தலாம்..!
நீங்கள் உங்களது மொபைல் போனிலிருந்தே எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இயங்கிக் கொண்டிருக்கிறது என்பது கண்டறிய முடியும்.
இந்தியாவில் அதிக மக்கள் பயன்படுத்தும் செயலிகளில்முன்னிலையில் இருப்பது வாட்ஸ் அப் செயலியாகும். தகவல்களை பரிமாறக் கொள்ள உதவும் இந்த செயலியில் மெட்டா நிறுவனம் அவ்வபோது புதிய புதிய அப்டேட்டுகளை கொடுத்து வாடிக்கையாளர்களை மகிழ்வித்து வருகிறது. சமீபத்தில் குரூப் வீடியோ கால், வாட்ஸ் அப் கம்யூனிட்டி, குழுவாக கால் பேசும் போது தனிப்பட்ட நபரை மியூட் செய்யும் வசதி போன்ற பல்வேறு புதிய வசதிகளை அறிமுகப்படுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது. அது போலவே தற்போதும் புதிய அப்டேட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது ஒரே எண்ணில் இயங்கும் வாட்ஸ் அப்பை, இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட வெவ்வேறு டிவைஸ்களில் பயன்படுத்த முடியும்.
இது போல ஒரு வசதி ஏற்கனவே வாட்ஸ் அப்பில் இருந்தாலும், அதனை சற்று விரிவுபடுத்தி புதிய அம்சங்களை சேர்த்து ஒரு சரியான பேக்கேஜாக கொடுத்துள்ளது அந்நிறுவனம். ஒரே எண்ணில் இயங்கும் வாட்ஸ் அப்பை தற்போது நம்மால் இரண்டு வெவ்வேறு மொபைல்களில் பயன்படுத்த முடியும். வாட்ஸ் அப்பில் லிங்க் டிவைசஸ் என்ற வசதியின் புதிய விரிவாக்கமாக இது உள்ளது.. மேலும் எத்தனை டிவைஸ்களில் உங்கள் வாட்ஸ் அப் இணைக்கப்பட்டுள்ளது என்பதையும் உங்களால் பார்க்க முடியும்.
Comments