Upcoming Artists Expo 2022

Upcoming Artist Expo 2022 என்ற தலைப்பில் Artistic Rupan’s Center of Arts என்கிற ஓவியர் பள்ளி கடந்த டிசம்பர் 29ஆம் தேதியிலிருந்து ஜனவரி 1ஆம் தேதி  வரை நான்கு  நாட்கள் வரை  ஓவிய கண்காட்சி நடத்தியது

அதன் நிறுவனர்  மற்றும் ஆசிரியர் திரு ,எம்,ரூபன்  அவர்களின் வழிகாட்டுதலின் பேரில் நடைபெற்றது  இந்த கண்காட்சி சென்னை அபிராமபுரம் 1வது தெருவில் அமைந்துள்ள லக்ஷ்னா ஆர்ட்  கேலரியில்  இந்த கண்காட்சி நடைபெற்றது.

,இந்த கண்காட்சியில்  32 மாணவ மாணவியர்கள் பங்கு பெற்றனர் .மற்றும் எட்டு வயது சிறுவர்களிலிருந்து  78 வயது பெரியவர்கள் வரை பங்கு பெற்றது சிறப்பு.இவர்கள்  தங்களின் ஓவிய படைப்புகளை பங்குபெறச் செய்தார்கள்.

 இதில் ஆயில் பெயிண்டிங், வாட்டர் கலர், அக்ரலிக் பெயிண்டிங் ,ஆயில் பேஸ்ட்டல் ,பேனா மை ஓவியங்கள் ,கலர்  பென்சில் ஓவியங்கள் ,தஞ்சாவூர் ஓவியம் , பென்சில் ஷேடிங் மற்றும் கேரளா ஓவியங்கள்இடம்  பெற்றிருந்தன.

 

இந்த கண்காட்சிக்கு  சிறப்பு விருந்தினர்களாக  தமிழ்நாடு அமைச்சர்  ராஜாகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் & சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு அவர்களும் , திரு சைலேந்திரபாபு ஐபிஎஸ் தமிழக சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவு டிஜிபி அவர்களும்  , கார்ட்டுனிஸ்ட்  திரு   மதன் அவர்களும் ஓவியர் திரு மணியம் செல்வன் அவர்களும், மூத்த பத்திரிகையாளர் ராம்ஜி ,ஸ்ரீநிகேதன் பைன் ஆர்ட்ஸ் பிரின்சிபால் பத்மபிரியாக மற்றும் பல ஓவியர்கள் கலந்து கொண்டு கண்பாட்சியை சிறப்பித்தார்க்ள்

 

இந்த கண்காட்சியை  பலதரப்பட்ட மக்கள் கண்டு களித்து ஓவியக் கண்காட்சி பங்கு பெற்ற ஓவிர்களை  வாழ்த்திவிட்டுச்சென்நார்கள்

அவர்களின் வாழ்த்து வளர்ந்து வரும் இளம் ஓவியர்களுக்கு உத்வேகமாக இருந்ததது என குறிப்பிட்டு சொல்லலாம்

 


தகவல் , ,



புகைப்படங்கள்

காணொளி

ஈஸ்வரி






























 

Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி