ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று.. 💐
ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடிய முதல் பெண்மணி வேலு நாச்சியார் பிறந்த தினம் இன்று..
இராமநாதபுரம் மன்னர் செல்ல முத்து சேதுபதி அவர்களுக்கும் சக்கந்தி முத்தாத்தாள் அம்மாளுக்கும் 1730 ஆம் ஆண்டில் ஒரே பெண் மகளாக வேலுநாச்சியார் பிறந்தார். இந்திய நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட முதல் பெண் வீர வேங்கை வேலு நாச்சியார்..
ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்தை எதிர்த்த காரணத்தால், வேலு நாச்சியாரின் கணவர் முத்து வடுகநாதர் கொல்லப்பட்டதோடு, சிவகங்கையை ஆங்கிலேயர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். கணவர் இறந்ததும் உடன்கட்டை ஏறும் வழக்கம் இருந்த காலத்தில், சிவகங்கையை மீட்க ஆங்கிலேயர்களை எதிர்த்து போரிட மருது சகோதரர்களின் பாதுகாப்புடன் சிவகங்கையில் இருந்து தப்பிச் சென்ற வேலு நாச்சியார், ஏழு ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். ஆங்கிலேயர்களின் அடக்குமுறைக்கெதிராக, ஹைதர் அலி உதவியோடு 1780ம் ஆண்டு சிவகங்கையை நோக்கி புறப்பட்ட வேலு நாச்சியாரின் படை, தடைகளை தகர்த்து சிவகங்கைக்குள் நுழைந்தது. நவராத்திரி விழா கொண்டாட்டம் நடைபெற்றுக்கொண்டிருந்த காலத்தில், கோட்டைக்குள் நுழைந்த வேலு நாச்சியார் படை ஆங்கிலேயர்களின் படையுடன் கடுமையாக போர் புரிந்தது. ஆங்கிலேயர்களின் கட்டுப்பாட்டில் இருந்து சிவகங்கையை மீட்ட வேலு நாச்சியார், 1796 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி இயற்கை ஏய்தினார்.
Comments