*யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு பிப்ரவரியிலிருந்து பணம் கொட்டப்போகிறது!*

 *யூடியூப் ஷார்ட்ஸ் கிரியேட்டர்களுக்கு பிப்ரவரியிலிருந்து பணம் கொட்டப்போகிறது!*





பிப்ரவரி முதல் தேதியிலிருந்து யூடியூப் நிறுவனம் ஷார்ட்ஸ் வீடியோ உருவாக்கி வழங்குபவர்களுடன் விளம்பர வருவாயை பகிர்ந்துகொள்ள உள்ளது.


புதிய திட்டம் மூலம் ஷார்ட்ஸ் பகுதியில் வீடியோக்களுக்கு இடையே பார்க்கும் விளம்பரங்களில் இருந்து பணம் சம்பாதிக்க முடியும். முன்னதாக இருந்த யூடியூப் ஷார்ட்ஸ்


60 விநாடிகளில் ஒரு விஷயத்தை வீடியோவாக வெளிப்படுத்தும் போக்கை டிக் டாக் தொடங்கி வைத்து பெரியளவில் பார்வையாளர்களை கவர்ந்தது. 


அதை இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் என்ற பெயரிலும், யூடியூப் ஷார்ட்ஸ் என்ற பெயரிலும் தங்கள் தளங்களில் வழங்குகின்றன.


 இந்தியாவில் டிக் டாக் தடை செய்யப்பட்டுவிட்டதால் ரீல்ஸ் மற்றும் ஷார்ட்ஸ் சக்கைப்போடு போடுகிறது.


 காமெடியான குறு வீடியோக்கள், பாடல்கள், செல்லப் பிராணிகளின் சேட்டைகள், உணவுக் கடைகள், சமையல் குறிப்புகள், வயது வந்தோருக்கான ஜோக்குகள், வீடியோ மீம்கள், அரசியல் கருத்துகள் என பலவும் இதில் விரும்பிப் பார்க்கப்படுகின்றன.


யூடியூப் நிறுவனம் இத்தகைய ஷார்ட் வீடியோக்களுக்கு என ஒரு நிதியை ஒதுக்கி வந்தது. ஆனாலும் பெரிதாக ஷார்ட் வீடியோக்களுக்கு பணம் கிடைத்ததில்லை. ஆனால் அதிக பார்வைகளை மட்டும் பெறும்.


தற்போது வருவாய் பகிர்வுத் திட்டத்தை கொண்டு வந்துள்ளது. இது பிப்., முதல் தேதியிலிருந்து அமலுக்கு வர உள்ளது.


*எப்படி பணம் வரும்?*


வீடியோ கிரியேட்டர்கள் ஷார்ட் வீடியோக்கள் மூலம் பணம் பார்க்க விரும்பினால், அதற்கென தகுதிகளை நிர்ணயித்துள்ளனர்.


 தங்கள் ஷார்ட் வீடியோக்களை பணமாக்க நினைப்பவர்கள், ஆயிரம் சந்தாதாரர்களை பெற்றிருக்க வேண்டும் மற்றும் அவர்களது ஷார்ட் வீடியோக்கள் 90 நாட்களில் 1 கோடி பார்வைகளை பெற்றிருக்க வேண்டும்.


 இத்தகுதியை பூர்த்தி செய்யும் கிரியேட்டர்கள் இந்த பணமாக்கல் திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.


ஷார்ட் வீடியோ பீட்களுக்கு இடையே வரும் விளம்பரத்தை எத்தனை பேர் பார்க்கிறார்களோ அதனைப் பொறுத்து பணம் கிடைக்கும்.


 ஷார்ட் வீடியோக்களில் இசையை பயன்படுத்தியிருந்தால், எத்தனை டிராக் உள்ளதோ, அந்தந்த மியூசிக் பார்டனர்களுக்கும் தொகை பிரித்து அளிக்கப்படும்.


மியூசிக் இல்லாமல் சொந்த ஆடியோ எனில் தொகை முழுவதுமாக வீடியோ கிரியேட்டர்களுக்கு கிடைக்கும்.

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,