இந்திய அளவில் டிரெண்ட் ஆன 'தமிழ்நாடு' ஹேஷ்டேக்!*#தமிழ்நாடு#TAMILNADU
இந்திய அளவில் டிரெண்ட் ஆன 'தமிழ்நாடு' ஹேஷ்டேக்!*
- திடீர் காரணம் என்ன?
தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியின் கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் ‘தமிழ்நாடு’ ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்ட் ஆகி வருகிறது.
சென்னை கிண்டியில் காசி தமிழ் சங்கம் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களை தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி சந்தித்தார்.
அந்நிகழ்ச்சியில் பேசிய தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி, இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் வித்தியாசமான அரசியல் சூழ்நிலை உள்ளது. தமிழ்நாட்டில் தவறான, எதிர்மறையான அரசியல் அணுகுமுறைகள் இருக்கின்றன. இது ஒழிக்கப்பட வேண்டும். இந்தியா என்பது ஒரே நாடு. தமிழ்நாடு என்று சொல்வதை விட 'தமிழகம்' என்று சொல்வதே சரியாக இருக்கும்' என்றார்.
தமிழ்நாட்டை தமிழகம் என்று அழைக்க வேண்டும் என்று தமிழ்நாடு கவர்னர் ஆர்.என் ரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இந்நிலையில், டுவிட்டரில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவியின் 'தமிழகம்' கருத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் 'தமிழ்நாடு' என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி பல்வேறு தரப்பினரும் டுவிட்டரில் தங்கள் கருத்தை பதிவிட்டு வருகின்றனர்.
'தமிழ்நாடு' ஷேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தில் உள்ளது. பலரும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி டுவிட் செய்து வருகின்றனர்.
#TAMILNADU
Comments