இந்த 5 வேலைகளில் 1 தெரிஞ்சாலும் டாப்ல வரலாம்

 

அடுத்த 10 வருசத்தில இந்த 5 வேலைகளில் 1 தெரிஞ்சாலும் டாப்ல வரலாம்.! இனி பியூச்சரே இந்த டெக் தான்.!



ஒவ்வொரு நாளும், தொழில்நுட்பம் (Technology) மேன்மேலும் வளர்ந்து கொண்டே செல்கிறது. இதன் காரணமாகக் காலம் மாற-மாற மக்களின் எதிர்பார்ப்பும், பயன்பாடும் கூட வேறுபட ஆரம்பித்து விட்டன.

அந்த எதிர்பார்ப்பை பொறுத்து, ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு துறை முன்னிலை வகிக்கும். அப்படி இன்னும் பத்து ஆண்டுகளில் முன்னணியில் இருக்கும் தொழில்நுட்பங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம். இதைப் பற்றி தெரிந்துகொள்வதன் மூலம், தொழில்நுட்பம் சார்ந்த விழிப்புணர்வு ஏற்படுவதோடு, எதிர்காலத்திற்கு ஏதுவான எந்த துறையைத் தேர்ந்தெடுத்துப் படிக்கலாம் என்பது பற்றிய ஒரு கணிப்பும் உங்களுக்கு கிடைக்கும் என்பதனால் பதிவை முழுமையாக படிக்கவும்.


பள்ளிப்படிப்பு முடிக்கவிருக்கும் மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்களுக்கு இந்த பதிவு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சரி வாருங்கள், நேரடியாக விஷயத்திற்குச் செல்லலாம்.

 1. கம்ப்யூட்டர் விஷன் மற்றும் ஃபேஷியல் ரெகக்னிஷன் (Computer Vision and Facial Recognition) இப்போது டாப்பில் இருக்கும் ஒரு தொழில்நுட்பம் என்றால், அது நாம் பேசுவதை வைத்து வாய்ஸ் ரெகக்னிஷன் (Voice Recognition) மூலம் இயங்கும் பாதுகாப்பு அம்சங்களும், நாம் சொல்வதைக் கேட்டு அதற்கு ஏற்றவாறு செயல்படும் தொழில்நுட்பம் தான் என்பதில் சந்தேகமில்லை. இதேபோல், கம்ப்யூட்டர் விஷன் மற்றும் ஃபேஷியல் ரெகக்னிஷன் என்று தொழில்நுட்பத்திற்கு முன்னேறிச் செல்ல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவர் சொல்லும் கட்டளையை வைத்து, அந்த செயல்பாடுகளை நிறைவேற்றும் தொழில்நுட்பத்தைப் போல, ஃபேஷியல் ரெகக்னிஷன் தொழில்நுட்பமானது முக பாவனைகளை கொண்டு தனக்கான கட்டளைகளை கண்டறிந்து, அதனை நிறைவேற்றும். மெஷின்களால் (Machine) கேட்கும் பொழுது பார்க்க முடியாதா என்பது தான் இந்த தொழில்நுட்பத்தின் கான்செப்ட்

2. நம்ம அண்ணே 5ஜி (5G) இல்லமா எப்படி? 

எதிர்கால தொழில்நுட்பம் என்ற பட்டியலில் 5ஜிக்கு இடமில்லாமல் எப்படி. அதிவேக இன்டர்நெட் வசதி, நம்பகமான வயர்லெஸ் நெட்வொர்க்கிங் (Wireless Networking) என்று, இந்த 5ஜி-யானது தொலைத்தொடர்புத் துறையை மொத்தமாக தனது கட்டுக்குள் வைத்துள்ளது. 5ஜி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியானது இணையதளத்தைச் சார்ந்து இருக்கும் அனைத்து தொழில்நுட்பங்களின் வளர்ச்சிக்கும் உதவிக்கரமாக இருக்கும்
3. ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் (Artificial Intelligence and Machine Learning) 

ஸ்மார்ட் போன்கள், ஸ்மார்ட் ரூம், ஸ்மார்ட் ஹோம், ஸ்மார்ட் வீட்டு உபயோக பொருட்கள் என்று அனைத்துமே ஸ்மார்ட்டாக இருக்கும் காலகட்டம் இது. இதற்கெல்லாம் காரணம் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் தான். ஸ்மார்ட் யுகத்திற்குப் பழகிவிட்ட மக்கள் கட்டாயம் அதிலிருந்து பின்வாங்க வாய்ப்பே கிடையாது. எனவே, எதிர்காலத்தில் நல்ல வரவேற்பு இருக்கும் தொழில்நுட்ப துறைகளில் ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் மற்றும் மெஷின் லேர்னிங் ஆகிய இரண்டிற்கும் முக்கிய இடம் இருக்கும். இன்னும் பத்து, இருபது ஆண்டுகள் வரை இவ்விரண்டு தொடர்பாக படிப்பவர்களுக்கு வரவேற்பு அதிகமாகவே இருக்கும்.
.4/ க்ளௌட் கம்ப்யூட்டிங் மற்றும் எட்ஜ் கம்ப்யூட்டிங் (Cloud Computing and Edge Computing) டேட்டா (Data) மற்றும் அனலிடிக்ஸ் (Analytics) துறையானது சமீப காலமாக பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

அதற்கான முக்கிய காரணம் க்ளௌட் கம்ப்யூட்டிங் தான். அதாவது, க்ளௌட்களில் சேகரித்து வைக்கப்படும் தகவல்களை இணையதள வசதி இருந்தால் எங்கு வேண்டுமானாலும் எந்த சாதனத்தைப் பயன்படுத்தி வேண்டுமானாலும் அதை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
அதேபோல எந்த சாதனத்திலிருந்து வேண்டுமானாலும் கிளவுடுகளில் தகவலைச் சேமிக்கவும் செய்யலாம். இதன் காரணமாக, எங்குச் சென்றாலும் உங்கள் லேப்டாப்பையும் (Laptop), ஹார்ட் டிஸ்கையோ (Hard Disk) தூக்கி செல்பவர்களுக்கு அதிலிருந்து விடுமுறை. ஸ்மார்ட்போன்கள் மூலம் தகவல்களை ப்ராசஸ் (Process) செய்யும் எட்ஜ் கம்ப்யூட்டிங் முறையும் இப்போது நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது


. 5. குவாண்டன் கம்ப்யூட்டிங் (Quantum Computing) இறுதியாக, அதிவேகத்தில் செயல்படும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் (Quantum Computers) தான் இனிவரும் எதிர்காலமே. குவாண்டம் கம்ப்யூட்டிங் இன்னும் ஆராய்ச்சி நிலையில் இருந்து வந்தாலும், இன்னும் பத்து ஆண்டுகளில் முதல் குவாண்டம் கம்ப்யூட்டரை சந்தையில் விற்பனைக்கு எதிர்பார்க்கலாம் என்று நிபுணர்கள் வட்டாரத்தில் செய்திகள் பரவி வருகின்றன. உலகமே அதிவேகத்தில் ஓடும்போது அதற்கு ஈடுகொடுக்கும் வகையில் உருவக்கப்படும் குவாண்டம் கம்ப்யூட்டர்கள் இனி வரும் காலங்களில் முக்கிய பங்களிக்கும்.


thanks : https://tamil.gizbot.com




Comments

Popular posts from this blog

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி