99 ரூபாய்க்கு 365 நாட்கள் வேலிடிட்டி... பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் பிளான்

 

99 ரூபாய்க்கு 365 நாட்கள் வேலிடிட்டி... பிஎஸ்என்எல் வழங்கும் அசத்தல் பிளான்பிஎஸ்என்எல் அனைவரும் வியக்கும் விதமாக 99 ரூபாய்க்கு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக யாரெல்லாம் பிஎஸ்என்எல் சிம்மை செகண்டரி சிம்கார்டாக பயன்படுத்த விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது ஏற்ற பிளான் ஆகும்.


சமீபத்தில் டெலிகாம் நிறுவனங்கள் அனைத்தும் தங்களுடைய கட்டணத்தை உயர்த்தியுள்ளன. இதன் மூலம் ஏற்கனவே தாங்கள் பயன்படுத்தி வந்த அதே பிளானில் ரீசார்ஜ் செய்ய விரும்புவோர் முன்னர் செலுத்தியதை விட அதிக கட்டணம் செலுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் இவ்வாறு கூடுதல் கட்டணம் செலுத்தி பெறப்படும் பிளானில் எந்தவிதமான கூடுதல் சலுகைகளும் இல்லை என்பது தான் மிகக் கொடுமையான விஷயம். இதைத் தவிர பல்வேறு வாடிக்கையாளர்களும் டெலிகாம் நிறுவனங்கள் பிளானின் வேலிடிட்டியை 28 நாட்களிலிருந்து 31 நாட்களாக மாற்ற வேண்டும் என்று கோரிக்கையை வைத்து வருகின்றனர். ஆனாலும் எந்த டெலிகாம் நிறுவனமும் இதை கண்டு கொண்டதாக தெரியவில்லை.

இப்படி தங்களுக்குள் புழுங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு தான் பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய பிளான்களை அறிமுகப்படுத்தியுள்ளது. மேலும் அந்த நிறுவனத்தின் புதிய ரீசார்ஜ் பிளான்கள் மற்ற டெலிகாம் நிறுவனங்களை விட அதிக சலுகைகளை வழங்குவதாகவும் கட்டணம் மிக மிக குறைவாகவும் உள்ளது என்பதுதான் வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி தரும் கூடுதல் தகவல்.

99 ரூபாய் பிளான் : பிஎஸ்என்எல் அனைவரும் வியக்கும் விதமாக 99 ரூபாய்க்கு பிளானை அறிமுகப்படுத்தியுள்ளது. முக்கியமாக யாரெல்லாம் பிஎஸ்என்எல் சிம்மை செகண்டரி சிம்கார்டாக பயன்படுத்த விரும்புகிறார்களோ அவர்கள் அனைவருக்கும் இது ஏற்ற பிளான் ஆகும். ஏனெனில் நீங்கள் வெறும் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்யும் பட்சத்தில் 365 நாட்களுக்கான வேலிடியுடன் மொத்தமாக 3 ஜிபி டேட்டாவும், மாதத்திற்கு 30 இலவச எஸ் எம் எஸ் உடன் மேலும் 300 நிமிடங்கள் வரையிலான கால் பேசும் வசதியும் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேறு பல கூடுதல் அம்சங்களும் உள்ளன. நீங்கள் பயன்படுத்தும் அந்த பிஎஸ்என்எல் சிம்கார்டு ஒரு வருடத்திற்கு மேல் ஆக்டிவாக இருக்கும் பட்சத்தில் உங்களுக்கு அன்லிமிடெட் கால் மற்றும் இலவச டேட்டா வழங்கப்படும். இதைத்தவிர வேறு பல கூடுதல் சலுகைகளும் வழங்கப்படும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜியோவின் வருகைக்குப் பின்னர் ஏர்டெல் போன்ற அனைத்து நிறுவனங்களும் இன்கமிங் காலை பெறுவதற்கு கூட மாதம் குறைந்தது 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்ய வேண்டும் என்ற விதிமுறையை ஏற்படுத்தியது. இதன் காரணமாகவே வாடிக்கையாளர் பலரும் தாங்கள் செகண்டரி சிம்மை பயன்படுத்தவே இல்லை என்றாலும் அதனை ஆக்டிவாக வைத்துக் கொண்டிருப்பதற்காகவே மாதமாதம் 99 ரூபாய்க்கு ரீசார்ஜ் செய்து வந்தனர். இவர்களுக்கெல்லாம் மிகவும் ஏற்ற திட்டமாக பிஎஸ்என்எல் இந்த 99 ரூபாய் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.ஒருவேளை இந்த திட்டத்தில் அதிக மக்கள் தங்களை இணைத்துக் கொள்ள விருப்பம் காட்டினார்கள் என்றால் மற்ற டெலிகாம் நிறுவனங்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் வாடிக்கையாளர்களை இழக்கும் என்று பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Thanks:https://tamil.news18.com/news/technology/bsnl-launches-rs-99-plan-with-395-days-validity-offers-3gb-monthly-data-unlimited-calls-2-882620.html

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,