கலையைத் தவமாகவே செய்து ' கலாதபஸ்வி' என்று எல்லோராலும் போற்றப்படுபவர் ,

 கலையைத் தவமாகவே செய்து ' கலாதபஸ்வி' என்று எல்லோராலும் போற்றப்படுபவர் ,



சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து உட்பட 53 படங்களின் இயக்குனர் ,


பொழுதுபோக்குக்காகத் தரத்தை சமரசம் செய்யத் தேவையில்லை என்பதைத் தன் படைப்புக்கள் மூலம் நிரூபித்தவர் ,


இந்தியாவின் தலைசிறந்த திரைப்பட விருதான ' தாதா சாகிப் பால்கே' விருது உட்பட ஏராளமான விருதுகள் பெற்றவர் ,


பல விதமான கதைகளை, கதாபாத்திரங்களை உருவாக்கி நல்லுணர்வையும் நேர்மறைச் சிந்தனைகளையும் மக்கள் மனங்களில் விதைத்தவர் 


எண்ணற்ற பாத்திரகளின் மூலம் மனித மனங்களின் வண்ணங்களை திரையில் வரைந்தவர்,


அவற்றின் மூலம் மனித மாண்பையும், மானுட விழுமியங்களையும் எழுப்பியவர் ,


உடைந்த பாத்திரங்களில் இருந்தே இன்னிசை நாதம் எழுகிறது எனும் உண்மையை உணர்த்தியவர், 


நடிப்பின் நுட்பங்கள் வெளிப்படும் காட்சிகளை அமைத்தவர்..... 


எத்தனை முறை பார்த்தாலும் முதல் முறை பார்த்த உணர்வை ஒவ்வொரு முறையும் கொடுத்த அவரது திரைப்படங்களையும் காட்சிகளையும் பாடல்களையும்

பாத்திரங்களையும்

மறக்கமுடியுமா என்ன? 


காதலைக் காவியமாக்கியவர், 

காமத்தைக் கவிதையாக்கியவர், 


இருளின் நிழலிலும் ஒளியின் துணுக்குகள் நடனம் புரிவதைக் கண்டவர்,  காட்டியவர், 


வறுமையில் செம்மை தீயாய் சுடர்வதைச் சொன்னவர், 


உடல் அழகினும், மனதின் அழகு பேரழகு என்பதை அழகியலாய் செதுக்கியவர், 


கதை அறிந்தவர், 

கலையின் விதை அறிந்தவர்,


இசை அறிந்தவர், மனிதரின் 

இயற்கை அறிந்தவர், 


உணர்வறிந்தவர், 

உலகம் ஒளியினால் ஆளப்படும் எனும் உண்மை தெளிந்தவர் 


கண்ணீரில் முத்தைக் கருத்தரித்தவர்  

மௌனத்தைக் கலை மூலம் கைமாற்றியவர்... 

 

அவர் புகழ் பெரிது

என் பட்டியல் சிறிது


மாஸ்டர்

ஆசான்

குரு 

பிதாமகன் 

முழுமையான கலைஞர் ....

ஐயா கே. விஸ்வநாத் அவர்கள் மறைவுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.


இதயத்தின் ஆழத்தைத் தொட்ட எழுத்தாளர் மற்றும் இயக்குனருக்கு இதயத்தின் நதிமூலத்தில் இருந்து கண்ணீர் அஞ்சலி 🙏


*

பிருந்தா சாரதி

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி