படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன்

 படையப்பா படத்திற்காக "நடிகர் திலகம்" சிவாஜி கணேசன் அவர்களுக்கு

ரூ. 1 ,00,00,001(ரூபாய் 1 கோடி மற்றும் ஒரு ரூபாய்) சம்பளமாக வழங்கப்பட்டது.
நடிப்பிற்காக அவர் வாங்கிய முதல் மற்றும் ஒரே ஒரு கோடி ரூபாய் சம்பளம் இந்த படத்தில் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
1980 களுக்குப் பிறகு சிவாஜி கணேசன் அவர் நடித்த எந்த படத்திற்கும் தனக்கென சம்பளத்தை நிர்ணயிக்காமல் அந்தந்த படத்தின் தயாரிப்பாளர்களிடம் "உனக்கு என்ன தோன்றுகிறதோ அதை எனக்கு கொடு" என்று கூறி விடுவாராம்.
உதாரணத்திற்கு அவர் விஜய்யுடன் நடித்த "ஒன்ஸ்மோர்" படத்திற்காக எஸ்.ஏ சந்திரசேகரிடம் ரூ.100 மட்டுமே முன்பணமாக பெற்றியிருக்கிறார்.
அதன் பின்னர் மொத்தமாக எஸ்.ஏ சந்திரசேகர் சிவாஜிக்கு 10 லட்சம் சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
அதுமட்டுமின்றி 1992 ஆம் ஆண்டு "உலகநாயகன்" கமல்ஹாசன் நடிப்பில் வெளிவந்த "தேவர் மகன்" திரைப்படத்திற்காக 20 லட்சம் சம்பளமாக சிவாஜி பெற்றியிருக்கிறார்.
அந்த பணத்தை கூட படத்தின் வியாபாரம் முடித்த பிறகு வழங்குமாறு தயாரிப்பாளர்களிடம் கூறியிருக்கிறார்.
அதே போல் "படையப்பா" திரைப்படத்திலும் தயாரிப்பாளர் தேனப்பனிடம் மற்றவர்களிடம் சொன்னதை போலவே சம்பளத்தை பற்றி சொல்லியிருக்கிறார்.
இந்த படத்திற்காக 10 முதல் 20 லட்சம் சம்பளமாக தருவார்கள் என்றும் எதிர்பார்த்திருக்கிறார்.
இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 1 கோடி ரூபாய்க்கான காசோலையை பார்த்ததும் அதனை 10 லட்சம் என்று முதலில் எண்ணி காசோலையை வாங்கி கொண்டு சென்று விட்டாராம். பிறகு தன் மகன் ராம்குமாரிடம் காசோலையை கொடுத்திருக்கிறார். அப்போது தான் அது ஒரு கோடிக்கான காசோலை என்ற விஷயம் தெரிய வந்திருக்கிறது.
சிவாஜியோ அதில் குறிப்பிடப்பட்ட தொகையான “1 கோடி” என்பதை பார்த்து தவறுதலாக ஒரு பூஜ்ஜியத்தை காசோலையில் சேர்த்து விட்டார்களோ என்று நினைத்து தயாரிப்பாளரிடம் இந்த விஷயத்தை தெரிவித்திருக்கிறார்.
அப்போது தான் சிவாஜியிடம் நடந்த விஷயத்தை கூறியிருக்கிறார் தயாரிப்பாளர்.
இந்த படத்தில் நடித்ததற்காக சிவாஜிக்கு 1 கோடி ரூபாய் தருமாறு தயாரிப்பாளரிடம் கூறியது "சூப்பர் ஸ்டார்" ரஜினிகாந்த் என்பது தெரிந்து ரஜினிகாந்துக்கு நன்றி தெரிவித்து கடிதம் அனுப்பியிருக்கிறார்.
கூடுதல் தகவலாக இதேபோல் நடந்த இன்னொரு சம்பவத்தை இப்போது பார்க்கலாம்.
2009 ஆம் ஆண்டு உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் வெளிவந்த "ஆதவன்" படத்திற்காக சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாய் வழக்குமாறு உதயநிதியிடம் நடிகர் சூர்யா சொல்லியிருக்கிறார்.
மேலும் அந்த பணத்தை தனது சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்து கொள்ளுமாறும் கூறியிருக்கிறார்.
ஆனால் உதயநிதியோ அதனை மறுத்து சூர்யாவின் சம்பளத்தில் பிடித்தம் செய்யாமல் நடிகை சரோஜாதேவிக்கு 1 கோடி ரூபாயை சம்பளமாக கொடுத்திருக்கிறார்.
நன்றி:கூகிள்(படங்கள்)
-பிரசாந்த் குமார்

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,