நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..!

 


நீச்சல்குளத்தில் நீரின் மேற்பரப்பில் நடிகர் கமல் பிரம்மாண்ட ஓவியம்..!

நீச்சல் குளத்தில் தண்ணீர் மேற்பரப்பில், நரைத்த தாடி, தலைமுடியுடன் நடிகர் கமல்ஹாசன் சிரிக்கும் பிரம்மாண்ட ஓவியம்.
கேரளா மாநிலம், திருச்சூர் மாவட்டம் கொடுங்கலூர் பகுதியை சேர்ந்த இளைஞர் டவன்ஸி சுரேஷ். இவர் ஒரு வித்தியாசமான சிந்தனைகள் உடைய ஓவியர். சக ஓவியர்களை காட்டிலும் ஏதாவது சாதிக்க வேண்டும் என நினைப்பவர். ஓவியர் டவன்ஸி சுரேஷ், பிரபலங்களின் படங்களை அடிக்கடி வரைவதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
நடிகர் கமல்ஹாசனின் உருவப்படத்தை தண்ணீரின் மேல் வரையும் புதுமையான எண்ணம் ஏற்பட்டது. மூணாறில் உள்ள ஒரு விடுதியின் மூன்றாவது மாடியில் உள்ள நீச்சல் குளத்தில், தண்னீரின் மேற்பரப்பில் 2,500 ஏ போர் பேப்பர் சீட் மற்றும் வர்ணங்களை கொண்டு கமலஹாசன் படத்தை காட்சிப்படுத்தினார். இந்தப் படம் 50 அடி உயரமும் 30 அடி நீளமும் உடையது. ஓவியர் டவின்ஸி சுரேஷ், நீச்சல் குளத்தில், தண்ணீரின் மேற்பரப்பில் இந்த படத்தை உருவாக்குவதற்கு மூன்று நாட்கள் ஆகியுள்ளது என்பது தான் கூடுதல் தகவல்!
நரைத்த தலை, தாடியுடன் சிரிக்கும் கமலின் தற்போதைய தோற்றத்தை அந்த ஓவியத்தில் அவர் தத்ரூபமாக வடித்துள்ளார். மூன்று தினங்கள் உடல் வலியுடன் சிரமப்பட்டும், மனதை ஒருமைப்படுத்தியும் சாதனை படைத்துள்ளார், இளைஞர் டவின்ஸி சுரேஷ்.
அண்மையில், பத்தல, பத்தல என, கமல் படப்பாடலை பாடிய தமிழகத்தில், கிருஷ்ணகிரி நொச்சிப்பட்டியை சேர்ந்த மாற்றுத்திறனாளி பாடகர் திருமூர்த்தி குளத்தில் தாளம் போட்டு பாடினார். இந்த வீடியோவை சமூக வலைதளத்தில் பார்த்த நடிகர் கமல்ஹாசன், திருமூர்த்தியை அழைத்து சந்தித்து பாராட்டினார். அதேபோல, கேரளா இளைஞரையும் நடிகர் கமல் கெளரவிக்க வேண்டும் என ஓவிய கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
நன்றி: Instant News

Comments

Popular posts from this blog

காது பிரச்சனைகளை முற்றிலும் குணமாக்கும் மருள் கற்றாழை

இந்திய இதழியலின் தந்தை எனப் போற்றப்படுபவருமான ராமானந்த சட்டர்ஜி

சுவை புதிது, சொல்புதிது, வளம் புதிது, பொருள் புதிது,