ஒடுக்கப்பட்ட இனத்தின் திராவிடக் குரல்! சத்தியவாணி முத்து நூற்றாண்டு பிறந்தநாள்!
ஒடுக்கப்பட்ட இனத்தின் திராவிடக் குரல்! சத்தியவாணி முத்து நூற்றாண்டு பிறந்தநாள்!
திராவிட இயக்க முன்னோடியும் திமுகவின் நிறுவன உறுப்பினர்களில் &ஒருவருமான சத்தியவாணி முத்துவுக்கு 100வது பிறந்தநாள் இன்று!
1967ஆம் ஆண்டு மீண்டும் பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்று பேரறிஞர் அண்ணாவின் அமைச்சரவையில் 8 அமைச்சர்களில் ஒரு அமைச்சராக பொறுப்பேற்று, சமூகநலம், மீன்வளம், செய்தித்துறை, ஆதிதிராவிடர் நலன் உள்ளிட்ட இலாகாகளை கவனித்தார்.அண்ணா மறைவுக்கு பிறகு அடுத்து அமைந்த கருணாநிதி தலைமையிலான அமைச்சரவையிலும் அங்கம் வகித்த சத்தியவாணி முத்து கருத்து வேறுபாடு காரணமாக திமுகவில் இருந்து பிரிந்து 1974ஆம் ஆண்டு தாழ்த்தப்பட்டோர் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியை தொடங்கினார். பின்னர் 1977 தேர்தலுக்கு முன்னதாக அதிமுக உடன் தனது கட்சியை இணைத்தார்.
1977 சட்டமன்றத் தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்த சத்தியவாணி முத்து, 1979-இல் அமைந்த பிரதமர் சரண்சிங் அரசில் மத்திய அமைச்சராக பொறுப்பேற்று திராவிடர் இயக்க வரலாற்றில் முதன்முதலில் மத்திய அமைச்சராகி புதிய வரலாற்றை படைத்தார்.
புற்றுநோய் பாதிப்பு காரணமாக 1999ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் தேதி காலமான சத்தியவாணி முத்துவின் உடல் மீது அவரின் ஆசைப்படி திமுகவின் கருப்பு சிவப்பு கொடி போர்த்தப்பட்டு அவர் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
Comments