ஸ்ரீ லட்சுமி கடாட்சம்
ஸ்ரீ லட்சுமி கடாட்சம் ஸ்ரீலக்ஷ்மி வைகுண்டத்தில் மகாலக்ஷ்மியாகவும், இந்திரனிடத்தில் சொர்க்க லக்ஷ்மியாகவும், மன்னர்களிடத்தில் ராஜலக்ஷ்மியாகவும், வீரர்களிடம் தைரிய லக்ஷ்மியாகவும், குடும்பத்தில் கிரக லக்ஷ்மியாகவும் விளங்குகிறாள். மஹாலஷ்மி பாற்கடலில் தோன்றியவள்..உப்பின் பிறப்பிடம் கடல் வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குதல் மிகவும் விஷேசம்.. மஹாலக்ஷ்மிமலரின் அழகு. அருள் பார்வையுடன் திகழும் செல்வத்தின் தெய்வம். விஷ்ணு பிரியை. கிரியா சக்தி. திருப்பாற்கடலில் இருந்து அமுதத்துடன் தோன்றியவள். அமுத மயமானவள். பொன்னிற மேனியுடன் கமலாசனத்தில் (செந்தாமரையில்) வீற்றிருக்கிறாள். நான்கு யானைகள் எப்போதும் நீராட்டுகிறது. செல்வ வளம் தந்து வறுமையை அகற்றி அருள் புரிபவள். கஜலக்ஷ்மி பாற்கடலில் இருந்து வெளிப்பட்டதும், அஷ்டதிக்கு கஜங்கள் எனப்படும் எட்டு யானைகள் தமது மனைவியரான பெண் யானைகளுடன், அவளுக்கு மங்கல நீராட்டின என்று புராணங்கள் கூறுகின்றன. பல்லவர்கள் அமைத்துள்ள குடைவறைக்கோயில்களில் பலவற்றில், யானைகள் நீரை முகந்து நீராட்ட, தாமரை மலரில் வீற்றிருக்கும் திருமகளைக் காண முடியும். யானைகளின் பிளிறலை லக்ஷ்மி...