Posts

ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் ACS மருத்துவமனை இணைந்து ஆவடி அருத்ததிபுரத்தில் பொது மருத்துவ முகாம்

Image
 திருவள்ளூர் மாவட்டம் ஆவடி இனிய உதயம் தொண்டு நிறுவனம் மற்றும் ACS மருத்துவமனை இணைந்து ஆவடி அருத்ததிபுரத்தில் நேற்று (25.09.2021) காலை 10 மணிமுதல் மதியம் 1.30 மணிவரை பொது மருத்துவ முகாம் நடந்தது. இந்த முகாமில் ACS மருத்துவமனையிலிருந்து 8 டாக்டர்களும் 10 நர்சுகளும் வந்து மருத்துவதில் பங்கேற்றனர். குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் என 150 க்கு மேற்பட்டோர் மருத்துவம் பார்த்து பயன்பெற்றனர்கள். தகவல் அல்லாபக்ஷ்

கணவன் மனைவி புரிதலுக்கு/ இன்றைய நயினாரின் உணர்வுகளில்

Image
  இன்றைய நயினாரின் உணர்வுகளில் கணவன் மனைவி புரிதலுக்கு

ஆகச் சிறந்த காதலன் நேரு/ கருமாண்டி ஜங்ஷன் அமிர்தம் சூர்யா

Image
 அமிர்தம்  சூர்யாவின் இன்றைய   கருமாண்டி ஜங்ஷன் - ஆகச் சிறந்த காதலன் நேரு ..................................................... கருமாண்டி ஜங்ஷன் - யூடியூப் சேனலில் இந்த முறை ... நேருவின் காதலும் செவ்வந்திப் பூ அஞ்சலியும் என்ற தலைப்பில் காணோளி by அமிர்தம் சூர்யா

சிறுநீரக, கருப்பை கோளாறுகளை நீக்கும் மாவிலங்க மரம் |

Image
  இன்றைய  இயற்கை வைத்தியம் டாக்டர்  ரேவதி  என்ன சொல்கிறார் சிறுநீரக, கருப்பை கோளாறுகளை நீக்கும் மாவிலங்க மரம் | Maavilanga Tree for Kidney and Uterus problems சிறுநீரக, கருப்பை கோளாறுகளை நீக்கும் மாவிலங்க மரம் by

10 நிமிடத்தில் அரிசி மாவை வைத்து, இந்த மொறு மொறு இன்ஸ்டன்ட் தோசை

Image
  10 நிமிடத்தில் அரிசி மாவை வைத்து, இந்த மொறு மொறு இன்ஸ்டன்ட் தோசை இட்லி மாவு, தோசை மாவு இல்லை என்றால் இனி கவலை வேண்டாம். உங்கள் வீட்டில் இருக்கும் கடையில் வாங்கிய பச்சரிசி மாவு அல்லது இடியாப்ப மாவு  அல்லது  நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவு எது இருந்தாலும் சரி, அந்த அரிசி மாவை வைத்து மொறு மொறு தோசை எப்படி சுடுவது என்பதை பற்றிதான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். முதலில் ஒரு மிக்ஸி ஜாரை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் 1 கப் பச்சரிசி மாவை போட்டுக்கொள்ள வேண்டும். எந்த கப்பில் அரிசி மாவை அளந்து எடுத்தீர்களோ, அதே  கப்பில்  2 1/4 கப் அளவு தண்ணீரை அந்த மிக்ஸி ஜாரில் ஊற்றி, இரண்டு ஓட்டு ஓட்டி கொள்ளுங்கள். அரிசிமாவு எந்த கட்டிகளில்லாமல் தண்ணீரில் கரைந்து தோசை மாவு நமக்கு கிடைத்துவிடும். இந்த மாவை ஒரு பாத்திரத்தில் மாற்றிக் கொள்ளுங்கள். இதுதான் தோசைக்கு நாம் பயன்படுத்த போகும் மாவு. இந்த மாவு கொஞ்சம் தண்ணீராகத் தான் இருக்க வேண்டும். அப்போது தான் தோசை மொறு மொறு வென  வரும்.  இந்த தோசை மாவில் தேவையான அளவு உப்பையும், 1/2 ஸ்பூன் சர்க்...

ஜாம்பியா அதிபருக்கு தந்த முக்கியத்துவம் கூட மோடிக்கு தரவில்லை.

Image
  ஜாம்பியா அதிபருக்கு தந்த முக்கியத்துவம் கூட மோடிக்கு தரவில்லை.. அலட்சியப்படுத்தினாரா கமலா ஹாரிஸ் வாஷிங்டன்: பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து கமலா ஹாரிஸ் தனது துணை அதிபருக்கான அதிகாரபூர்வமான ட்விட்டர் பக்கத்திலோ, தன்னுடைய சொந்த ட்விட்டர் பக்கத்திலோ சந்திப்பு முடிந்து 22 மணி நேரம் வரை பதிவு போடாமல் இருந்தது பேசுபொருளாக மாறியுள்ளது. பிரதமர் மோடி 4 நாள் அமெரிக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அமெரிக்க துணை அதிபரும், தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். இதன்பிறகு, பிரதமர் மோடிதான் கமலா ஹாரிஸ் உடனான சந்திப்பு குறித்து ட்விட்டரில் பதிவிட்டு படங்களையும் வெளியிட்டிருந்தார். ஜாம்பியா தலைவர் பற்றி ட்வீட் 130 கோடி மக்களைக் கொண்ட உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு இந்தியா. ஆனால் இந்திய பிரதமருடனான சந்திப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவதை தவிர்த்த கமலா ஹாரிஸ், மோடி சந்திப்புக்குப் பின் நடைபெற்ற ஜாம்பியா என்ற சிறிய நாட்டின் அதிபருடனான தனது சந்திப்பு பற்றிய விவரங்களையும் வீடியோவையும் தனது அதிகாரப்பூர்வ ட்விட்...

மதுரை ஸ்பெஷல் கார தோசை

Image
  மதுரை ஸ்பெஷல் கார தோசை இப்படி ஒரு முறை செஞ்சு பாருங்க! பிரசித்தி பெற்ற மதுரை இந்த கார தோசைக்கும் ரொம்பவே ஸ்பெஷல்! டெய்லி ஒரே மாதிரியான தோசை சாப்பிட்டு போரடித்து போனவர்கள் விதவிதமான தோசைகளை சுட்டு சாப்பிடலாம்.  அந்த  வகையில் சட்னி கூட தேவையில்லை, காரசாரமான மொறுமொறு கார தோசை இந்த முறையில் செய்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் மதுரை கார தோசை செய்ய தேவையான பொருட்கள்: பழுத்த தக்காளி – மூன்று, பெரிய வெங்காயம் – ஒன்று, பூண்டு பல் – 5, வர மிளகாய்  –  10, உப்பு – தேவையான அளவிற்கு, நல்லெண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், தோசை மாவு – தேவையான அளவு. மதுரை கார தோசை செய்முறை விளக்கம்:  தோசை சுட்டு அதன் மீது இந்த சட்னியை தடவி வேக வைத்து எடுத்தால் காரசாரமான கார தோசை  ரெடி  ஆகிவிடும். இதற்கு அதிக பொருட்கள் கூட நமக்கு தேவைப்படுவது இல்லை. ரொம்பவே வித்தியாசமான சுவையில் இருக்கக் கூடிய இந்த கார தோசை செய்ய தேவையான பொருட்களை முதலில் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை கழுவி எடுத்துக் கொள்ளுங்கள். அதில் பொடிப் பொடியாக நறுக்கிய தக்காளி, வெங்காயம் சேர்த்துக் கொள்ளுங...