Posts

35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை -

Image
 35 லட்சம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை -  சென்னை: கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வாங்கிய 48 லட்சம் பேரில், 35 லட்சம் பேரின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படாது என கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது. கூட்டுறவு வங்கிகளில் ஏராளமானோர் நகைக்கடன் வாங்கியிருந்த நிலையில், தள்ளுபடி செய்யப்படும் என்ற எதிர்பார்த்தனர். நகைக்கடன் குறித்து தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் கூட்டுறவுத்துறை ஆய்வு மேற்கொண்டது. இதன் அடிப்படையில், நகைக்கடன் தள்ளுபடிக்கான புதிய நிபந்தனைகள் மற்றும் பட்டியலையும் கூட்டுறவுத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி *நகைக்கடனை முழுமையாக செலுத்தியவர்களுக்கு தள்ளுபடி கிடையாது.. *40 கிராமுக்கு மேல் ஒரு கிராம் அதிகம் வைத்திருந்தாலும், தள்ளுபடி கிடையாது *அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர், கூட்டுறவு சங்கத்தில் பணிபுரிபவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி கிடையாது. *ஆதார் எண்ணை தவறாக வழங்கியவர்கள், ரேசன் அட்டை வழங்காதவர்கள், வெள்ளை அட்டை உடையவர்களுக்கும் நகைக்கடன் தள்ளுபடி இல்லை. *பொங்கலுக்கு முன்பு, அரசு விழாவில் தகுதியான 25 சதவீதம் பேருக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டு நகைக...

முருகனின் வடிவங்களும்.. வழிபாட்டு பலன்களும்..

Image
 முருகனின் வடிவங்களும்.. வழிபாட்டு பலன்களும்.. சிவபெருமானுக்கு 64 வகையான வடிவங்கள் இருப்பதைப் போல, முருகப்பெருமானுக்கும் பல்வேறு வடிவங்கள் இருக்கின்றன. அவற்றில் சில வடிவங்களைப் பற்றியும், அவற்றை வழிபட்டால் கிடைக்கும் பலன்களைப் பற்றியும் இங்கே பார்ப்போம். ஞானசக்திதரர்:- திருத்தணியில் எழுந்தருளி இருக்கும் முருகனின் திருக்கோலம், ‘ஞானசக்திதரர்’ வடிவமாகும். இந்த முருகனை வழிபட்டால் நினைத்த காரியங்கள் வெற்றியுடன் முடியும். கந்தசாமி:- பழனி மலை மீது இருந்து அருளும் பாலதண்டாயுதபாணியின் திருவடிவம் ‘கந்தசாமி’ வடிவமாகும். இந்த உருவத்தை வழிபட்டு வேண்டிக்கொண்டால், சகல காரியங்களும் சித்தியாகும். ஆறுமுக தேவசேனாபதி:- சென்னிமலை முருகப்பெருமான் ஆலயத்தின் கர்ப்பக் கிரக மாடம் ஒன்றில் ‘ஆறுமுக தேவசேனாபதி’ வடிவத்தை தரிசிக்க முடியும். இவரை வழிபட்டால் மங்களகரமான வாழ்வு கிடைக்கும். சுப்பிரமணியர்:- நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள திருவிடைகழியில் உள்ள முருகப்பெருமான் ஆலயத்தில் அருளும் மூலவர் ‘சுப்பிரமணியர்’ ஆவார். இவர், தன்னை வழிபடும் பக்தர்களின் வினைகளை நீக்கி ஆனந்தத்தை அளிக்கக் கூடியவர். கஜவாகனர்:- திருமருகல்...

கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்தார்

Image
 கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு கோவையில் அய்யப்ப சுவாமி சிலை கண் திறந்ததாக பரபரப்பு ஏற்பட்டது. பதிவு: டிசம்பர் 29,  2021 12:05 PM  கோவை, கோவை செல்வபுரம் தில்லை நகரில் தில்லை விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் அய்யப்ப சுவாமிக்கு தனி சன்னிதானம் உள்ளது. இந்த பகுதியை சேர்ந்தவர்கள்  கார்த்திகை மாதத்தை ஒட்டி அய்யப்பனுக்கு மாலை அணிந்து சபரிமலை செல்வதற்காக விரதம் இருந்து வருகின்றனர். இந்த கோயிலில் 40-ம் ஆண்டு மண்டல பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பூஜையின்போது அய்யப்ப சுவாமி சிலைக்கு நெய்யபிஷேகம் உள்ளிட்ட சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. இதனை அங்கிருந்தவர்கள் தங்களது செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டனர்.  அந்த வீடியோவில் கண் திறந்து மூடுவது போல காட்சிகள் பதிவாகி இருந்தன. உடனடியாக அந்த வீடியோவை பதிவு செய்தவர் நெகிழ்ச்சி அடைந்து தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் காண்பித்தார். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. கோவையில் அய்யப்பன் சுவாமி கண் திறந்ததாக கூறப்பட்ட நிகழ்வு பக்தர்களிடையே பரப...

இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து; மனைவியை பிரிந்ததாக அறிவிப்பு

Image
 இசையமைப்பாளர் டி.இமான் விவாகரத்து; மனைவியை பிரிந்ததாக அறிவிப்பு இசையமைப்பாளர் டி.இமான் தானும் தனது மனைவியும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டதாக அறிவித்துள்ளார். சென்னை, தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், தனது மனைவியும் தானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்றுவிட்டதாக அவரது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த தகவல் அவரது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வாழ்க்கை நம்மை பல்வேறு பாதைகளுக்கு இட்டுச் செல்லும். அந்த வகையில் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை.  எனது நலன் மீது அக்கறை கொண்டவர்கள், இசை ரசிகர்கள், ஊடகத்துறையினர் அனைவரும் எங்கள் தனிப்பட்ட உணர்வுகளுக்கு மதிப்பளித்து, வாழ்க்கையில் நாங்கள் முன்னோக்கிச் செல்ல உதவுமாறு கேட்டுக் கொள்கிறேன். உங்கள் புரிதலுக்கும், அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி” என்று அவர் பதிவிட்டுள்ளார்.  டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு தி...

வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கால அவகாசம்

Image
  வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் (ஐடிஆர்) செய்வதற்கான கால அவகாசம் நாளை மறுநாளோடு (டிசம்பர் 31) முடிகிறது. இந்நிலையில் டிசம்பர் 27-ம் தேதிமட்டுமே 15.49 லட்சம் எண்ணிக்கையில் வருமான வரி ரிட்டர்ன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. மொத்தமாக இதுவரையில் 4.67 கோடிக்கு மேற்பட்ட அளவில் வருமான வரி ரிட்டன் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 2020 -21-ம் நிதி ஆண்டுக்கான வருமான வரி தாக்கல் செய்வதற்கு இவ்வாண்டு ஜூலை மாதம்31 வரையில் அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதன் பிறகு அதுசெப். 30 வரையில் நீட்டிக்கப்பட்டது. இதற்கிடையில் மத்திய அரசுஅறிமுகப்படுத்திய புதிய வருமானவரி தளத்தில் பல்வேறு தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டன. அதனால், மக்கள் வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதில் சிரமங்கள் ஏற்பட்டன. அதைத் தொடர்ந்து வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் டிசம்பர் 31 வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில் இதுவரையில் மொத்தமாக 4.67 கோடி ஐடிஆர் விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இதில் 2.50 கோடி விண்ணப்பங்கள் ஐடிஆர் 1 வகையின் கீழும், 1.70 கோடி விண்ணப்பங்கள் ஐடிஆர் 4 வகையின் கீழும் சமர்ப்...

தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம்

Image
  தமிழர் திருநாளாய் மாறிய தமிழ்ப் புத்தாண்டு; ரேஷன் பைகளில் திடீர் மாற்றம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு தரப்பில் வழங்கப்பட உள்ள பொங்கல் பரிசு தொகுப்பு பையில் தமிழ்ப்புத்தாண்டு வாழ்த்துகள் என அச்சிடப்பட்டிருந்த புகைப்படம் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள் என்னும் வாசகத்தை தற்போது நீக்கி ‛தமிழர் திருநாள் நல் வாழ்த்துகள் ' என குறிப்பிட்டுள்ளனர். எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, பொங்கல் பையில் தமிழ் புத்தாண்டை திமுக அரசு நீக்கியிருப்பதை பலர் வரவேற்றுள்ளனர். நகர்புற உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால் தேவையில்லாத பிரச்னைகள், சர்ச்சைகளை தவிர்க்க இதனை நீக்கியுள்ளதாகவும் சிலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

ராபர்ட் புரூஸ் ஃபுட் நினைவு தினம்

Image
  ராபர்ட் புரூஸ் ஃபுட் நினைவு தினம் (Rabert Bruce Foote Death Anniversary) இந்தியாவின் பழங்கால வரலாற்றின் தந்தை எனப் போற்றப்படுபவர் ராபர்ட் புரூஸ் ஃபுட் ஆவார். இவர் சென்னையில் இந்தியப் புவியியல் அளவைத்துறையில், நிலவியலாளராகப் பணிபுரிந்தார். இவர் சென்னைக்கு அருகில் பல்லாவரம் மற்றும் அத்திரப்பாக்கம் பகுதிகளில் கல்கோடாரி, முதுமக்கள்தாழி, பானைகள், கற்கால வெட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தார். இக்கருவிகள் சுமார் 5 முதல் 15 லட்சம் ஆண்டுகள் பழமையானது. இவை ஹோமோ எரக்டஸ் என்னும் மனித இனம் பயன்படுத்தியவை எனத் தெரிய வந்தது. இந்த அரிய கண்டுபிடிப்பு, பழங்கால மனித இனத்தின் வாழ்க்கை இந்தியத் துணைக் கண்டத்திலும் இருந்தது எனத் தெரிய வந்தது. இவர் இந்தியாவிலேயே இரண்டாவது மிக நீளமான பெலும் குகையைக் கண்டுபிடித்தார். இவர் 42 ஆண்டுகள் வரலாற்றுக்கு முற்பட்ட இந்தியா பற்றிய ஆய்வுகளில் ஈடுபட்டார். இவரின் ஆய்வுகள் மனிதனின் வரலாற்றை அறிந்துக் கொள்ள உதவுகிறது. இவர் கண்டுபிடித்த கற்கருவிகள் மற்றும் கண்டுபிடிப்புகள் 1904ம் ஆண்டில் சென்னை அருங்காட்சியகம் எடுத்து காட்சிக்கு வைத்துள்ளது. இவர் 1912ஆம் ஆண்டு டிசம்பர் 29 ...